Posted by S Peer Mohamed
(peer) on 5/4/2019 4:49:27 PM
|
|||
அஸ்ஸலாமு அழைக்கும் லா, சொவ்மா இருக்கியா … ஊட்ல எல்லாரும் சொவ்மாஇருக்காலா....̀̀̀
இங்க இருக்குற டிராபிக் ல எவ வூட்டுக்கும் போவ வாலா முடியுது.... வருஷத்துக்கு ஒரு மட்டமாவது இப்டி எல்லா தாய் புள்ளை லுவோலயும் ஒரே எடத்துல பாக்கமுடியுதே! அல்லா இந்த புள்ளைலுவொலுக்கு ஆயுச போட்டு வச்சி இந்த மாறி அடிக்கடி நடக்க வைக்கட்டும்... காலையிலே 10 மணிக்கு ஆரம்பிச்சிச்சிவோ. மொதல்லே ஆம்பளைலுவோ பக்கம் பம்பரம் குச்சி கம்பு , கோலிக்காய் னு அதுவ வெளாண்டத பாத்தா ….. இப்ப ஊர்லவுள்ள பயலுவொலுக்கு கூட தெருல வெளையாட கொடுப்பின இல்லாம போச்சு, பம்பரம் குத்த தெருல மண்ணும் இல்ல வெளில வெளயாட வர அதுவொலுக்கு தோனுறதும் இல்ல. ஆவாத ஒடுக்கத்து டி வி யும் கையில அந்த போனையும் நோண்டிக்கிட்டு இருக்கத்தான் நேரம் அதுவொளுக்கு. அடுத்தாக்களே ஜூம்மா தொழுவ போச்சிவோ அம்புட்டு ஆம்பளையலுவோலும் அந்த நேரத்துல அம்புட்டு கொமரியலுவொலும் ஒடியாடி வெளையாண்டிச்சிவோ – அப்டியே பெருநா அன்னைக்கி நம்மூர்ல ஆம்பளைலுவோ அம்புட்டும் கொத்வா பள்ளிக்கு போனதும் கொமரியலுவோ வெளையாடுமே அதே நெனப்புல வந்திச்சு புள்ள தொழுதுட்டு வந்து - ருசியாட்டு நெய் சோறு, அளவு போல வால எலை ல போட்டு கல்யாண ஊடு மாறிலமா பந்திலே வச்சி பறிமாறிச்சிவோ அழகாட்டு சோறு தின்னு முடிச்சு சோறுதின்னே வாய்க்கு 4 வெத்துலய மடக்கி திங்க லாம்னு - அந்த பையன கூட்டு கேட்டேன் இந்த நாட்லே அதெல்லாம் தட செஞ்சிருக்காங்கோ கண்மா அப்படின்னுட்டான் அந்த அப்தாஃப் பய. அதுக்கு பதிலா வேணா இத திங்குறியலா கண்மா நு - ஆரஞ்சி முட்டாயும் தேன் முட்டாயும் ஊர்லே இருந்து கொண்டுவந்தது னு குடுத்தான் அதும் நல்லா ருசியாதான் இருந்திச்சி ஆமா. இந்த காலத்து கொமரியளுவொளுக்கு நம்ம காலத்துல இருந்த சோறு பலகாரம் லான் தெரியுதான்னு பாக்க ஒரு போட்டி வச்சி இருந்தானுவோ அதுல பாப்பியா… அடுத்தாக்குல கை மருந்து பத்தி தெரிஞ்சத சொல்ல சொல்லிச்சிவோ, அதுல பாத்தனா நெறய புள்ளைலுவோ தனக்கு தெரிஞ்ச பாட்டி வைத்தியத்த சொல்லிச்சிவோ அதுல இருமலுக்கு, வயித்து போக்குக்கு நு கைபுள்ளைலுவொல தனியா வச்சிட்டு இருக்குறவலுவொளுக்கு ஏத்த மாதிரி சொன்ன எல்லா கைமருந்து பக்குவம் அம்புட்டும் நல்ல புரயோஜனமா இருந்திருக்கும். ஆம்புளைலுவோ பக்கம் அடுத்தால நம்ம ஊரு 4 முஹல்லா பேருல மேல முஹல்லா , நடு முஹல்லா, கீழ முஹல்லா , L.V முஹல்லானு 4 குரூப்பா போட்டு 7 கல் வெளையாண்டுசுவோ, அப்றம் 35 வயசுக்கு கீழ் உள்ள எளசுவலுக்கும் ,அதுக்கு மேலே உள்ள பெரிசுவளுக்கும் கயிர் இழுக்குற போட்டி பாத்துகோ, அங்க நடந்தத கேட்பியா அல்லாவே..... பின்ன அந்த காலத்துல தின்ன நல்ல ஒரமான தீவனமா இப்போ இந்த எளசுவோ திங்கிது பீசா பர்கர் நு நம்மூரு பன்னுவொலலோ தின்னுட்டு திரியுதுவோ.... அப்றமா கபடி,ஆபியம் மணியாபியம்னு ஆமபளைலுவோலும் பையனுவோலுமா நல்லா ஒலப்பிட்டு கெடந்துச்சுவோ,
ஆனால்லா ம்மா , எல்லாதுக்கும் மேல இந்த பொம்பளை புள்ளைங்கல்லாம் சேந்து இந்த குட்டி புள்ளைவலுக்கு மாறு வேட போட்டினு ஒன்னு வச்சால்வோ பாரு அல்லாஹ் அல்லாஹ்..... சொல்லி முடியாதுலா அந்த அழக …. அதுல ஒவ்வொன்னையும் அவ்ளோ அழகாட்டு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்சி உட்டுருக்குவோ பாரு....ம்மாடி ஒரு மாறி லட்சனம்மா ஒவ்வொன்னும் கீரக்கார பாட்டி... பூக் காரம்மா... காய்கரி பாட்டி.. தயிர் பாட்டி…பழ காரரு... கறிகட காரரு.. இடியப்ப காரரு நு ம்மாடி அவ்லோ லெட்சனமா இருந்திச்சிவொ ஒவ்வொன்னும், ஒவ்வொரு சுண்டுவலும் அதுக்கு உடுத்து இருந்த உடுப்புவலும் அதோட அழகும் அதுவொ பேச்சும் காய்கறி காய்கரினிட்டும் ...... ம்மா பூ வாங்கலையா……. ம்மா கீர வாங்கலியா……னு யாவாரி மாறியே அதுவோ பேச்சும் நடிப்பும் அழகோ அழகுலா எவ்லோதான் நா உண்ட்ட வெலா வாரியா வெவரிச்சாலும் அங்க நடந்த ஒவ்வொன்னையும் நீ நேர்ல பாத்து இருக்கனும்லா அவலோ லெட்சனம்மாட்டு இருந்திச்சிலா.... இப்போ உள்ள புள்ளைவலுக்குலாம் இந்த மாறி யாவாரி ஆட்களுவோலெல்லாம் தெரியவே மாட்டுக்குலா, கண்ணா வாப்மா னு கூட இருந்தாச்சும் கதை சொல்லியாவது அந்த காலத்துலே என்னலாம் நடந்திச்சி னு சொல்லி கொடுப்பா இங்க அதுக்கும் வழி இல்ல, இங்க வளற்ற புள்ளயலுவோலாம் அந்த 4சொவத்துக்குள்ளே தானே இருக்குதுவோ ஸ்கூல் க்கு போய்ட்டு வந்தா ஆவார அந்த tv யும் போனும் தான். இத ஏற்பாடு செய்ய ஆம்புளைலுவோ பக்கமும் சரி அதே மாறி பொம்பளைலுவோ பக்கமும் சரி நெறைய மக்களுவோ கஷ்ட்டபட்டுச்சிவோலாம்லா.... அந்த தெளஃபீக் பையன் தான் வேனா வெயில்ல அலஞ்சி திரிஞ்சி இந்த பார்க்குக்கு பெர்மிஷன் வாங்குனானாம்லா..... அப்றம் இந்த சிட்டி கோல்ட் மொய்தீன் பரிசு வாங்க, புதுசா வந்தவங்களுவொல கூப்டா நு ஊர்பட்ட வேலை பாத்தானாம்லா... 6ஆந்தெரு டாஸ்கண்ட் வூட்டு பையன் இருக்கான் பார்லா ஜெய்னுலு அவந்தான் எல்லா பயலுவோலயும் கார்ல கூட்டிபோய் மொதல்லயே எறக்கி உட்டு வெளையாட்டலாம் ஆரம்பிச்சானாம்... பா அதுக்குலாம் மேல அந்த புதுமனை ல மொத வூட்டு அமீர் புஹாரி இருக்காம்லாலா அந்த பையன் தாம்லா இந்த கூட்டதுக்கு மெயின் ஆளாம் ... சோறு கரி எல்லாம் அவந்தாம்லா ஏற்பாடாம் இதில்லாம இந்த வெளையாண்டுட்டு இருந்த பயலுவோ எடைல...எடைல தண்ணி இல்ல கிளாஸ் இல்லனு வேற அந்த புள்ளய கடைக்கி அனுப்பி சாமான் வேற வாங்கிட்டுவர வச்சிருக்கானுவோ... அப்றம் அந்த லெப்ளோ தெரு அவ்மது மொய்தீன் இருக்கான் பாரு அவந்தான் தினுசு தினுசா யோசனலாம் குடுத்தானாம்... இதுல அந்த அல்தாஃப் பயல பத்தி சொல்லனுமே அந்த பூங்கால தேவையான வெளாட்டுக்கு க்கும் ஏற்பாட்டுக்கும் இங்கயும் அங்கயுமா திரிஞ்சிகிட்டு விசிலடிச்சி விசிலடிச்சி கத்தி எல்லாத்தையும் ஒண்ணா கூட்டுரதுக்குள்ள அவனுக்கு பாதி உசிரு போயிருச்சு.. அந்த பயலுக்கு. அப்றம் மொம்மது, தமீமு, பாஸித்து, ரியாஸு வேற… இன்னும் செல பயலுவோ பேரு ஒன்னும் நெனவுலயும் வர மாட்டிக்கு…. இப்டி எல்லாரும் சேந்துதான் அல்லாவோட கிருபைல அழகாட்டு செஞ்சி முடிச்சிருக்கானுவோ... பொம்பளைய்லுவோ பக்கம்தான் அம்புட்டு அழகாட்டு ஏற்பாடு செஞ்சிருச்சுவோலா வூட்டு வெலையும் பாத்துகிட்டு புள்ளைலுவொலயும் வச்சிகிட்டு 250 வருக்கு இந்தபுள்ளைலுவோ மோர் வரைக்கும் செஞ்சி செறப்பிச்சிருக்கே பெரிய விசயம் தாம்லா…. மாஷா அல்லாஹ்.... இப்டி நெறைய புள்ளைலுவோ அன்னைக்கு ஒரு நாள் கூத்துக்கு பல நாளா வேல செஞ்சிருக்குவோ... அல்லா அந்த புள்ளைலுவோ எல்லாத்துக்கும் கிருபை செய்யட்டும்... இங்க உள்ள நம்ம சந்ததிவொளுக்கு நம்ம மண் வாசணை மறக்காம இருக்க இந்த மாதிரி போட்டியலுவோலையும் விருந்துவொலையும் அடிக்கடி இந்த ஈமான் புள்ளைலுவோ தொடர்ச்சியா நடத்தனும் அதுக்கு அல்லாஹ் கிருபை செய்வான் நானும் துஆ செய்றேன் நீயும் துவா செய்லா... இன்ஷா அல்லாஹ்… அல்லாஹ் எனக்கும், உனக்கும் ஆயுச போட்டு வைக்கட்டும் அடுத்த விருந்துல எல்லா மக்களுவொளையும் சந்திக்க, நீயும் கண்டிப்பா வாலா அதுக்கு… இன்ஷா அல்லாஹ்… |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |