Posted by Haja Mohideen
(Hajas) on 12/12/2019 5:12:15 AM
|
|||
டிசம்பர் 8 : புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பில் மூன்றாம் ஆண்டு தொடர்ச்சியாக இந்த ஆண்டு புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்து முடிந்தது .. இதில் சிறப்பு விருந்தினராக ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆசாத், ஏர்வாடி ஐக்கிய ஜமாத் தலைவர் செய்யது சார், RR ஜுவல்லரி உரிமையாளர் ஜாவித் , முன்னாள் ஆசிரியர் தங்கவேலு சார் , இஸ்மா மருத்துவசேவை பொறுப்பாளர் அப்துல்லாஹ் ,லெப்பைவளவு முத்தவல்லி பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .... மொத்த பரிசு தொகை 50ஆயிரம் இதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு மொத்தம் 30ஆயிரம் பரிசும் மீதமுள்ள 20ஆயிரம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏர்வாடி நோயாளிகளுக்கு மருத்துவ செலவிற்கு வழங்கப்படுகிறது .... மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களின் பங்களிப்பை கொடுக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் ... இதில் முதல் இடம் ஜெய பிரகாஸ், இரண்டாம் இடம் சுரேஷ், மூன்றாம் இடம் முனி , மேலும் ஜூனியர் பிரிவில் முதல் இடம் சுபின் இரண்டாம் இடம் சுதர்சன் மூன்றாம் இடம் குமார் ஆகியோர் பிடித்தனர் .. இவண்: விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் , நெல்லை ஏர்வாடி |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |