தென்காசி மாவட்டம் கொடிமரம் அருகே 85 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியுடன் ஆதரவில்லாமல் வாழ்ந்து வந்தார். தனது மனைவிக்கு இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலைமையில் பராமரிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ வழியில்லாமல் தற்கொலை செய்வதற்கு முயன்றுள்ளார். உடனடியாக கொடிமரம் பகுதியைச் சார்ந்த SDPI நண்பர்கள் தகவலறிந்து நம்மை தொடர்பு கொண்டார்.
நமது பசியில்லா தமிழகம் குழுவினர் உடனடியாக விரைந்து சென்று அவர்களை மீட்டு காவல்துறை அழைத்துச்சென்றோம்.
நமது தென்காசி காவல்துறை ஆய்வாளர் திரு.ஆடிவேல் ஐயா அவர்களுடன் இணைந்து அந்த முதியவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை மனமாற்றம் ஏற்படுத்தி, நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை வார்த்தைகள் கூறி உடனடியாக GENERAL MEMO வழங்கி திருநெல்வேலியில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் இரண்டு முதியவர்களும் சேர்த்து விடப்பட்டனர்.
உடனடியாக அனுமதி வழங்கிய திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சோயா அறக்கட்டளை சரவணன் அண்ணன் அவர்களுக்கு பசியில்லா தமிழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பசியில்லா தமிழகம் அறக்கட்டளை 8883340888 www.pasiillatamilaham.com
|