பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி நகரம் சார்பாக மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
ஜனவரி - 30: R.S.S கோட்சே கும்பலால் தேசதந்தை காந்தி அடிகளார் படுகொலை செய்யப்பட்ட தினத்தில் இன்று காந்தியை கொன்றவர்கள் தேசத்தையும் கொல்கிறார்கள் - என்ற முழக்கத்தோடு CAA, NRC, NPR ஆகிய சட்டத்திற்கு எதிராக, ஏர்வாடி பஸ்திருப்பத்தில் வைத்து மாலை - 6:45 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட் நாங்குனேரி தொகுதி தலைவர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒரு நிமிடம் காந்தியடிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட பேச்சாளர் காஜா பிர்தொளஸி அவர்கள் தனது உரையில் காந்தியின் தியாகத்தை நினைவு கூர்ந்தது மட்டுமல்லாது இன்று மத்திய பா ஜ க அரசு மக்கள் நலன் சார்ந்து ஆட்சியை நடத்தாமல் மக்களை அடிமைப்படுத்தும் வர்ணாசிரம கொள்கையின் அடிப்படையில் இன்று மக்கள் விரோத சட்டமான CAA,NRC & NPR - ஆகிய சட்டங்களை கொண்டு வந்தது ஒற்றுமையாக இருந்த இந்திய சமூக மக்களை பிளவுபடுத்தி வெறுப்பு அரசியலை தூண்டி மக்கள் நலன் சார் விஷயங்களை புறந்தள்ளிவிட்டு இன்று சர்வாதிகார ஆட்சியை நடத்திவருகிறது CAA,NRC & NPR -சட்டங்களை திரும்பப் பெறும்வரை இப்போராட்டம் ஓயாது நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் எவ்வித ஆவணங்களையும் நாங்கள் சமர்ப்பிக்க மாட்டோம் - என்ற உறுதி மொழியோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கண்டன உரையாற்றினார். இறுதியாக பகுதி தலைவர் மீரான் நன்றியுரை ஆற்றினார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் புறநகர் தொகுதி செயலாளர் முஹம்மது அமீன், S.D.P.I கட்சியின் தொகுதி தலைவர் கனி, ஏர்வாடி நகர தலைவர் பீர் முகம்மது, ஆகியோர் கலந்து கொண்டனர் இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்
|