Posted by S Peer Mohamed
(peer) on 2/19/2020 12:48:23 PM
|
|||
பல லட்சக் கணக்கில் இசுலாமியர்கள் தமிழ்நாடு முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திரண்டனர். எந்தக் கடையும் சேதமடையவில்லை. பேருந்துகள் உடைக்கப்படவில்லை, கொளுத்தப்படவில்லை. செல்போன்கள் திருடுபோகவில்லை. அப்படியொரு கட்டுப்பாடு இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அதீத பாசமில்லாமல் வராது. ஆனால் இந்து முன்னணியோ, சங்கிகளோ இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிந்திருந்தால் தமிழ்நாடு இன்று அமைதி பூமியாக இருந்திருக்க முடியுமா என்று யோசித்துப் பார்க்கிறேன். பேருந்துகளில் மக்கள் பாதுகாப்பாக பயணித்திருக்க முடியுமா, கடைகள் உடைபடாமல், திருடுபோகாமல் இருந்திருக்க முடியுமா? எத்தனை கோடி ரூபாய் இழப்பிலான சேதத்தினை தமிழ்நாடு சந்தித்திருக்கும்? கோவை, திருப்பூரில் இந்து முன்னணி கும்பல் செய்த கலவரத்தில் சொத்தக்களை இழந்தவர்களின் மதிப்பு எத்தனையோ கோடி! ஒரு கட்டப்பஞ்சயத்துக்காரன் செத்த போது, எங்கள் உள்ளம் காயப்பட்டிருக்கிறது அதனால் பேருந்துகள் உடைகிறது என்று சொன்ன தமிழிசை செளந்தர்ராஜன் எங்க! இதுதான் மக்கள் விரோத சங்கிகளுக்கும், மக்களின் உரிமைகளுக்காக போராடுகிற இசுலாமிய தமிழர்களுக்கும் உள்ள வேறுபாடு! Vivekanandan ramados |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |