Posted by S Peer Mohamed
(peer) on 3/6/2020 8:42:53 AM
|
|||
முன்பொரு முறை சிந்தனைச் சரம் மாத இதழில் துணை யாசிரியராக நான் பணிபுரிந்தபோது அதில், 'பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்துவது குறித்து தங்களது கருத்து என்ன' என்பதும் ஒரு கேள்வி. அதற்கு அவர் தந்த பதில் : பாரம்பரிய இஸ்லாமியர் களுக்கு தஃவா அழைப்புப் பணி செய்தாலே போதுமானது. எங்களுக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்ட மாதிரி இருந்தது. மிகச்சிறந்த சொற்பொழிவாளர். பிரபல்யமான ஒரு அறபுக் கல்லூரியின் முதல்வரிடமிருந்து இந்தப் பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 'என் மூலம் செவியுற்ற ஒரு சிறு செய்தி என்றாலும் அதையும் பிறருக்கு அடையச் செய்யுங்கள்!' என்ற நபிகள் நாயகத்தின் (ஸல்) பொன் மொழியை மூச்சுக்கு முன்னூறு முறை பயன்படுத்தும் அறிஞர் பெருமகனாரா இப்படி என்று மிகப் பெரிய வருத்தம் எங்களுக்கு! ஆனால்... இன்றைய தமிழ் மாநில உலமா சபையின் தகுதிமிக்க தலைவர் நமது அன்பிற்குரிய ஆலிம் பெருந்தகை ஹாஜா முஹ்யித்தீன் பாகவீ தலைமையில்... குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக பேசி பரபரப்பு ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திலேயே நேரடியாகச் சந்தித்து உண்மை நிலையை விளக்கியதுடன் இஸ்லாம் குறித்து நூலை அன்பளிப்பாக வழங்கி... ஓர் அளப்பரிய தஃவா - அழைப்பியல்பணி செய்து விட்டு வந்துள்ள உலமா சபை குழுவினருக்கு ஒரு மகத்தான சல்யூட்! அல் ஹம்து லில்லாஹ்! ✓ இனிய இரு வேண்டுகோள்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மாதத்தில் வெறுமனே நமக்கான ஒரு பறக்கத்துக்காக மவ்லித் ஓதி சீரணி வழங்கிக் கொள்வதுடன் நின்று விடாமல்.... நபிகள் நாயகம் (ஸல்) குறித்த செய்திகளையும், மனித நேயம் குறித்து குர்ஆன் கூறும் மகத்தான செய்திகளையும் நமது தொப்புள் கொடி சகோதரர்கள் அனைவருக்கும் சேரும் வகையில் ஓர் ஏற்பாட்டை ஜமாஅத்துல் உலமா வருங்காலத்தில் முன்னின்று செய்ய வேண்டும்! 'ஒருவரைக் குறித்து அறியாத வரை பரம எதிரி! அறிந்து விட்டால் உற்ற நண்பர்' என்ற முதுமொழிக்கேற்ப நம்மை, இஸ்லாமை பிறமத சகோதரர்களுக்கு அறிமுகம் செய்வோம்! இரண்டாவது இனிய வேண்டுகோள்! வெள்ளி மேடைகளில் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இனிய சொல்லாடல்களைக் கையாள்வோம்! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |