Posted by S Peer Mohamed
(peer) on 3/6/2020 8:52:39 AM
|
|||
முஸ்லீம் இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் –
ஏற்கெனவே, இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்; முஸ்லிம்கள் தீவிரவாதிகள்; மதரஸாக்கள் தீவிரவாதப் பயிற்சிக்கூடம்; பள்ளிவாசலில் போராடத் தூண்டுகிறாரகள்; முஸ்லீம் இளைஞர்கள் லவ் ஜிஹாத் செயகிறாரகள்; என்கின்ற குற்றச்சாட்டுகளின் வரிசையில்... இறுதியாக, இப்போது இஸ்லாமிய மதகுருமார்களான - உலமாக்கள் மீதும் பழிபோடப்பட்டுவிட்டது. இது, பன்மை சமூகத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிக்க வேண்டாமா? நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்! பள்ளிவாசல் மிம்பர்களில் உலமாக்கள் இந்த உம்மத்துக்கு என்ன சொல்லித்தருகிறார்கள்? அவர்கள் அமைதியை போதிக்கிறார்களா? வன்முறையை தூண்டுகிறார்களா? பொதுவெளியில் ரஜினி வீசிய குற்றச்சாட்டுக்கு, "நீங்க நினைக்கிற மாதிரி ஆட்கள் நாங்க இல்லை; “இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” என்றால் அதன் பிரதிநிதிகள் வேறு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ரஜினியை ஏன் சந்தித்தீர்கள்? என்று கேட்பவர்கள், விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சினையில் கும்பல் கும்பலாகச் சென்று கமலஹாசனை சந்தித்தார்களே, ஏன்? சினிமாக்காரன், அவர் ஒரு கூத்தாடி - அவரைப் போய் நாம சந்திப்பதா? கடந்த முப்பது ஆண்டுகளாக இயக்கவாதிகளின் மேடைகளில் உலமாக்களும் – இமாம்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்களே? அதன் தொடர்ச்சிதான் இதுவும் என்பதை உலமாக்கள் புரிந்தே வைத்துள்ளார்கள்.
லில்லாஹ் – அல்லாவுக்காக... சமுதாய நலனுக்காக... என்கிற இக்லாசான - தூய எண்ணத்தோடு அவர்கள் தங்கள் பணியை இனியும் தொடருவார்கள்... ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆச்சு; குடும்ப நிகழ்சிகளில் கலந்துக்க முடியல; ஜமாத்துல கூபிட்றாங்க... என இதோ... இப்போது அவர்கள் டெல்லி புறப்பட்டுவிட்டார்கள்...கலவரத்தில் பாதிக்கப்பட்ட சொந்தங்களின்
அன்புடன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |