Posted by S Peer Mohamed
(peer) on 3/6/2020 9:04:42 AM
|
|||
கண் கலங்க வைத்த உரையாடல் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நேற்று காலை 11மணிக்கு பாடம் நடத்திக்கொணடிருக்கும் வேளையில் ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவரின் அழைப்பு ....நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹஜ்ரத் அவர்கள் ....இயல்பான விசாரிப்புக்குபின் டெல்லி நிலவரங்களை கேட்டேன்... வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 1மணிக்கு வந்தோம் என்று நிகழ்வுகளை கண் கலங்க கூறினார்கள்மனித நேயமுள்ள மனசாட்சியுள்ள யாரும் அந்த கோரக்காட்சிகளை பார்த்து விட்டு சாப்பிடவோ தூங்கவோ முடியாதே அப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் வன்முறையாளர்கள்.
பெண்கள், குழந்தைகள், வாலிபர்கள் என்று திட்டமிட்டு நிதானமாக 72 மணிநேரங்கள் அந்த பகுதி முழுமையையும் தங்கள் கட்டுப்பாட்டில்வைத்து ஆற அமர சுமார் 1000 க்கும் அதிகமானோர் கையில் துப்பாக்கிகள் ,இரும்புத்தடிகள் வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் கொடூரமான ஆயுதங்களோடு தனித்தனியாக சென்றால் நாம் தாக்கப்பட்டு விடுவோம் என்று அஞ்சி கும்பலாக ஒவ்வொரு வீதியிலும் அடையாளமிடப்பட்ட வீடுகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கி வீட்டிலுள்ள கேஸ்களை திறந்து விட்டு கைகளில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசி ஆண்களை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தி கொலை செய்துள்ளார்கள்.. படுகொலை செய்யப்பட்ட எல்லோருடைய உடல்களிலும் குண்டு காயங்கள் இருந்தது என்றால் வன்முறை யில் ஈடுபட்ட அனைவரும் துப்பாக்கியோடு வந்துள்ளார்கள் என்று விளங்க முடிகிறது பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்க பிற மக்கள் அஞ்சும் அளவுக்கு அரசாங்கம் வஜ்ரா வாகனங்களையும் அதிகமாக போலிஸாரயும் நிறுத்தி அச்சுறுத்திகொண்டிருக்கிறது ...அந்தபகுதிகளுக்கு செல்ல டாக்சி டிரைவர்கள் கூட வர மறுத்து பாய் அந்தப்பகுதிகளுக்கு போகாதீர்கள் என்று அச்சத்தோடு எச்சரிக்கிறார்கள் அதையும் மீறித்தான் அங்கு சென்று வந்துள்ளோம்.
ஒரு தைரியமான பஞ்சாபி காரர் எங்களை தனித்தனியாக அழைத்துக்கொண்டு போலீசிடம் தைரியமாக பேசி அந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார் இயல்பு வாழ்க்கை திரும்பியது என்ற எந்த அடையாளமும் அங்கு இல்லை மக்கள் இன்னும் அந்தக் கலவர பீதியிலிருந்து நீங்கவில்லை என்பதை அவர்களின் பேச்சு எங்களுக்கு புரிய வைத்தது கணவனை விபத்தில் பறிகொடுத்த ஒரு தாய் இந்த வன்முறையில் தனது தனது 2 பிள்ளைகளையும் இழந்து தவிக்கும் தவிப்பை எந்த வார்த்தைகளில் சொல்வது என்று தெரியவில்லை கண்களெல்லாம் குளமாகிறது கேட்கின்ற பொழுது. ஏழை முஸ்லிம்களை கொல்வது பணக்கார முஸ்லிம்களை அவர்களின் சொத்துக்களை சூறையாடி அவர்களை ஒன்றுமில்லாமல் நிர்மூலமாக்குவது இந்த வன்முறையின் மிக முக்கியமான திட்டமாக நிர்ணயித்து வெறியாட்டம் போட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது ....ஏனென்றால் கொல்லப்பட்ட அனைவரும் ஏழைகள் பெரும் வியாபார நிறுவனத்தை தீயினால் கொடுத்திருக்கிறார்கள் பல்வேறு வீடுகளில் நகைகளை கொள்ளையடித்து இருக்கிறார்கள் அங்கு இருக்கிற சூழ்நிலையை விவரிப்பதாக இருந்தால் கொல்லப்பட்ட பிணங்களை வாங்கி செல்ல கூட ஆளில்லை... பிணவறையில் பல பிணங்கள் அழுகி கொண்டிருக்கிறது கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், வாலிபர்கள்,என்ன ஆனார்கள் என்ற தவிப்பில் குடும்பத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? கொல்லப்பட்டு விட்டார்களா? என்று திக்குத் தெரியாத தவிப்பில் கண்ணீரோடு எதிர்பார்த்து பதைபதைப்போடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை அவர்களோடு சேர்ந்து நாங்களும் அழுவதைத் தவிர.... இவ்வளவு பாதிப்பையும் தொடர்ச்சியாக செய்கிற வரைக்கும் எப்படி நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்று அங்கிருந்த பல ஹிந்து சகோதரர்களிடம் கேட்ட போது எங்களால் என்ன செய்ய முடியும்? எதிர்பார்க்காத தாக்குதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடூரமான ஆயுதங்களோடும் துப்பாக்கிகளோடும் இரும்புக் கம்பிகளுடன் எங்களுக்கு முன்னாடி நின்று கொண்டு கல்லெறிந்து எங்களை காயப்படுத்தி துரத்தி விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள் நாங்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவர்களுடைய அந்த முரட்டுத்தனம் தான் எங்களை முன்னேற விடாமல் தடுத்து விட்டது இவ்வளவு பாதிப்புகளை நினைக்கும்போது எங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் எங்களுடைய எஞ்சிய வாழ்வை வருத்தத்தோடு கழிக்க வேண்டுமே காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் அவருடைய வார்த்தைகளிலேயே அதிகமாக தெரிந்தது. ஷிவ் விகார் பகுதியில் உள்ள கால்வாயில் பல பிணங்கள் இன்னும் எடுக்கப்படாமல் துர்நாற்றம் வீசிய நிலையில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள் இந்திய தமிழக மீடியாக்கள் இன்னும் யாரும் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வில்லை பல கெடுபிடிகளுக்கு இடையில் சில வெளிநாட்டு மீடியாக்கள் மட்டும்தான் படம்பிடித்து சில காட்சிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கத்தின் நிலை... சில நிதி உதவிகளை அறிவித்துள்ளார்கள் ஆனால் அதை பெறுவதற்கு எந்த ஆவணமும் இல்லாத நிலையில் எரிந்துபோன ஆவணங்களை எடுத்து வா என்று எங்களை அலைக்கழிக்கிறார்கள் ... வாழ்வாதாரத்திற்கான எந்த அடையாளமும் இல்லாமல் தெருக்களிலே வீதிகளிலே நின்று கொண்டிருக்கிறோம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் பட்டால் கூட உதவிகள் வந்திருக்கும் பிற மக்கள் உதவி இருப்பார்கள் ஆனால் அரசாங்கத்திற்கும் வன்முறை பகுதிகளுக்கும் பயந்து அங்கு செல்வதையே மக்கள் தவிர்த்து வருகிறார்கள் அராஜகத்தை அரங்கேற்றிய அரசாங்கம் மத்தியிலும் மெஜாரிட்டி ஓட்டுக்களை இழந்துவிடுவோம் என்பதால் மௌனம் காத்து வேடிக்கை பார்க்கிறது கெஜ்ரிவாலின் மாநில அரசு தன் மாநிலத்தின் அத்தனை வாழ்வாதாரங்களும் வன்முறையாளர்களால் சிதைக்கப்பட்ட நிலைமையில் வளர்ச்சி என்று சொல்லி மௌனம் காப்பது வேதனையிலும் வேதனை ...
கொலைகாரர்களுக்கு கத்தி எடுத்து கொடுக்கிற வேலையில் கெஜ்ரிவால் அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது உமரின் ஆட்சி என்று சொன்னவர் ஹிட்லருக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் பதிமூன்று பள்ளிவாசல்கள் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு பள்ளிவாசல்களுக்குள்ளே கேஸ் சிலிண்டர்களை திறந்து விட்டு தீவைத்து முழுமையாக பயன்படுத்த முடியாத அளவுக்கு அதை சிதைத்திருக்கிறார்கள் ராம பக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த மிருகங்கள் குர்ஆன் ஷரீஃப்களெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டு....கண்கள் குளமாகிறது.... இவ்வளவு கொடூரங்களையும் வணக்கஸ்த்தலங்களில் அரங்கேற்றியிருக்கிறார்கள் பல்வேறு தெருக்களிலே நிறுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் தீயினால் கொளுத்தப்பட்டு முழுவதும் எலும்புக் கூடுகளாக காட்சியளிக்கிறது. இனி அதை எந்த விதத்திலேயும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதைந்து போயிருக்கிறது ஒட்டுமொத்தமாக வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையில் இனி எங்களுக்கு யார் பாதுகாப்பு யாரிடத்தில் போய் நாங்கள் அழுவோம்??? தெரியவில்லையே என்கின்ற வேதனையோடும் கண்ணீரோடும் நின்றுகொண்டிருக்கும் அந்த மக்களிடத்தில்.... பார்க்கும் இடங்களிளெல்லாம் இதே சோகம் என்ன சொல்வது என்று தெரியவில்லை எங்களுக்கு?
இறைவா உன்னைத் தானே இந்த மக்கள் நம்பி இருக்கிறார்கள் இவர்களை இப்படி நிராயுதபாணியாக விட்டு விட்டாயே இவர்களுக்கு உன்னுடைய உதவி எப்போது கிடைக்கும் என்று இறைவனிடத்திலே கண்ணீர் சிந்தி விட்டு வந்திருக்கிறோம் . வேதனையின் உச்சம் மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தோம் ஆனால் அப்படி ஒரு கொடூரங்களை பார்க்க நிகழ்ந்து விட்டதே என்கின்ற வலியும் வேதனையும் என்னுடைய மனதை ரணமாக ....அதைவிட காயப்பட்ட இதயங்கள் காயப்பட்ட உடல்களோடு கண்ணீரோடும் இனி வாழ்க்கை எப்படி இருக்குமோ என்கின்ற பயத்தோடும் அச்சத்தோடும் மருத்துவமனையில் நோயாளிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் தலைகளில் கம்பிகளால் பலமுறை தாக்கப்பட்ட காரணத்தினாலே மூளை குழம்பிய நிலையில் பேச இயலாயாத அளவுக்கு பேசினாலும் வார்த்தைகளில் தெளிவு இல்லாத அளவுக்கு இனி அவர்கள் ஒரு நடை பிணங்களாக அல்லது மூளைத்திரண் பாதிக்கப்பட்ட நிலையில் தான் அவருடைய வாழ்க்கை கழியுமோ ? என்ற கவலையிலே வழியும் கண்ணீரோடும் கலங்கிய இதயத்தோடும் திரும்பினோம்... மக்கள் அளிக்கும் உதவியோடு அவர்களின் துயரம் போக்க மீண்டும் டெல்லி நோக்கி இன்ஷாஅல்லாஹ்..... N.A.ஃபஹ்ருத்தீன் ஃபைஜி 05/03/2020 வியாழன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |