திருநெல்வேலி , பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபயிற்சிக்கு சென்ற திரு. வின்சென்ட் அங்கு யாரோ தவறி விட்டுச் சென்ற 16 கிராம் தங்க சங்கிலியை கடந்த வாரம் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் ஒப்படைத்தார்.
உடனடியாக விசாரணையை துவக்கிய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி அங்கு பணிபுரியும் காவாலாளிகளிடம் யாரேனும் தனது பொருட்களை காணவில்லை என தேடி வந்தார்களா? என விசாரணை மேற் கொண்டனர்.
நெல்லை ஜங்சன் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் தங்க சங்கிலியை தவற விட்டது தெரியவந்தது. உரிய முறையில் விசாரித்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெருக்கடி மிகுந்த கொரோனா தொற்றுக் காலத்திலும் நெல்லையின் நேர்மை குணத்தை பிரதிபலித்த திரு வின்சென்ட் (82 வயது) அவர்களை பாராட்டி சிறு பரிசு வழங்கினேன். மேலும் முக கவசம், சானிடைசர் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கி நூறாண்டு வாழ வாழ்த்தினேன். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படும் போது தன் பொருள் 4 மடங்கு போய்விடும் என்றார். உண்மைதானே நண்பர்களே!!
“நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்.
|