காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு இது....
'நீங்கள் காவல் துறையில் இல்லாதிருந்தால் ஒருவரும் உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் ", என்று சமீபத்தில் ஒரு அதிகாரி என்னிடம் கூறினார் . உண்மை தான் .... இந்த உண்மையை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே நன்கறிவேன் ....
சென்னை யில் பணியாற்றிய போது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நான் தான் அருகிலுள்ள மளிகைக்கடையில் வாங்குவேன் . அந்தக் கடையில் வேலை பார்க்கும் சிறுவனுக்கு நான் காவல்துறை அதிகாரி என்று தெரியாது . கைலி கட்டிக்கொண்டு தான் கடைக்குப் போவேன் . கொஞ்சம் சீக்கிரமா கொடுப்பா என்றால் மிகவும் கோபப்படுவான் .... திட்டுவான் ..... வரிசையில் போய் நில்லுய்யா என்று கத்துவான் .... சில நேரங்களில் என்னுடைய காக்கிச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் அதிகாரமும் , ஆணவமும் எட்டிப் பார்க்கும் . " டேய் நான் யார் தெரியுமா ", என்று கோபத்தோடு கேட்பேன் .
வேல வெட்டி இல்லாம ஊரச் சுத்துர , வொனக்கென்னையா மரியாதை ", என்பான் . நானும் அமைதியாக வந்து விடுவேன். இன்று வரை அதே கடையில் தான் காய்கறிகள் வாங்குகிறேன். அந்தப் பையன் இப்போது வளர்ந்து பெரிய பையராகிவிட்டார். ஆனாலும் அதே போல் மிகவும் கேவலமாக திட்டுகிறான்.....
என்னுடைய உண்மையான மதிப்பு அந்தத் தம்பிக்குத் தான் தெரிகிறது . நான் ஒன்றுமில்லாத குப்பை என்று ........ என்னுள் ஆணவமும் பெருமையும் , எழும்போதெல்லாம் அந்தத் தம்பி தான் எனக்கு போதி மரம் ...... அவனைப் பார்க்கும்போது சப்த நாடியும் அடங்கி விடும். அவ்வளவு கேவலமாகத் திட்டுவான் . இன்றைக்கும் அதை நான் ரசிக்கிறேன் ...... இன்று வரை நான் யாரென்று அவனுக்குத் தெரியாது .....
போலி மரியாதைகளும் வரட்டு கவுரவங்களும் நிறைந்த அரசாங்க உத்தியோகம் நம்மை ஆணவப் படுத்தி விடுகிறது ... நான் ஒன்றுமில்லாத குப்பை என்பதை இன்றும் நினைவூட்டும் அந்தத் தம்பி வாழ்க .......
நமது படிப்போ , பதவியோ , செல்வமோ , சொத்துக்களோ நமக்கு கடைசி வரை உதவாது ...... அன்பு காட்டுவோம் , அனைவரையும் நேசிப்போம் .... விட்டுக் கொடுப்போம் , தாழ்ந்து போவோம் ....மகிழ்ச்சி என்றும் நிலைக்கும் ,... வாழ்த்துக்கள் ..........
|