Posted by S Peer Mohamed
(peer) on 9/2/2020 12:43:20 PM
|
|||
மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 5 சமூகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். பெரிய இடத்துப் பெண்ணாக சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவர். கான்பூர் ஐஐடியில் பட்டப் படிப்பு முடித்து விட்டு அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்று அங்கு வாழ்ந்து வந்தவர். இந்திய பழங்குடி மக்களின் சொல்லொண்ணாத் துயரங்களைக் கண்டு அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவே சட்டம் படித்தவர். அமெரிக்க குடியுரிமையை உதறித் தள்ளி விட்டு இந்தியா வந்து சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்காகச் சட்டப் போராட்டம் நடத்தியவர். டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியையாகப் பணியாற்றி வந்த தொழிற் சங்கவாதி, சமூகச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞர் தான் சுதா பரத்வாஜ். மாவோயிஸ்ட் என்று பழி சுமத்தப்பட்டு பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இவருடைய உடல் நிலை மிகவும் மோசடைந்துள்ளது. இருப்பினும் சமூக ஆர்வலர் வரவர ராவ் போலவே இவருக்கும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதையும் அதை நீதிமன்றமும் கண்டிக்காமல் இருப்பதையும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உட்பட பலர் விமர்சித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சுதா பரத்வாஜின் 23 வயதான மகள் மாய்ஷா தன்னுடைய தாய் குறித்து கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதனை இங்கு மொழி பெயர்த்துப் பதிவிடுகிறேன். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் அம்மா கைது செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவரை அம்மாவை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை என்னால் தொட முடிந்தது, அவருடன் பேச முடிந்தது. ஆனால் அம்மா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு என் இதயம் சுக்குநூறாக நொறுங்கிப் போனது. அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்தேன். பல மாதங்கள் விடாமல் அழுது கொண்டிருந்தேன். பூனா நீதிமன்றத்தில் அம்மாவை காண செல்லும் போதெல்லாம் போலீஸ்காரர்கள் சூழ குற்றவாளி போல அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். அது ஒரு கொடிய காட்சி. சிறைச்சாலையில் அம்மா எப்படி சமாளிக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. நீதிமன்ற வளாகத்துக்குள் அம்மாவை அணைத்துக் கொள்ள ஒரு முறை முயன்றேன். ஆனால், ஈவிரக்கமின்றி என் கையை தட்டிவிட்டார் அங்கிருந்த பெண் காவல்துறை அதிகாரி. நான் வெகுண்டெழுந்தேன். ஆனால், அப்போதும் அம்மா நிதானம் இழக்கவில்லை. அவர்களிடமும் பரிவுடன் நடந்து கொண்டார். கரோனா காலம் உலகைப் பீடித்ததை அடுத்து தங்களுடைய குடும்பத்தினரிடம் தொலைப் பேசியில் பேச சிறை வாசிகள் அனுமதிக்கப்பட்டார்கள். எப்படியும் அம்மா என்னை அழைத்துப் பேசிவிடுவார் என்று தினமும் காத்துக் கிடப்பேன். ஒரு வழியாக ஜூன் 9-ம் தேதி அம்மாவின் குரலைக் கேட்டேன். நான்கு மாதங்கள் கழித்து அம்மாவின் குரலைக் கேட்க நேர்ந்தபோது பூரித்துப் போனேன். நன்றி: ‘தி இந்து’ ஆங்கிலம் தமிழில்: ம.சுசித்ரா |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |