நெல்லை : நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால் குறிச்சி சேர்ந்த நம்பிராஜன் அதே பகுதியை சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த வான்மதியை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி மற்றும் சிலர் கடந்த நவம்பர் மாதம் நம்பிராஜனை கொலை செய்து நெல்லை ரயில்வே தண்டவாளத்தில் உடலை வீசி விட்டு சென்றனர்.
இதற்கு பழிக்குப்பழியாக கடந்த மார்ச் மாதம் நாங்குநேரி அருகே உள்ள புரோட்டா கடை நடத்திவரும் ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர் சுரேஷ் ஆகிய இருவரையும் நம்பிராஜன் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர்.
அதற்குப் பழிக்குப் பழியாக இன்று மருகால்குறிச்சி பகுதியல் உள்ள நம்பிராஜனின் வீட்டிற்கு வந்த கும்பல், நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்றனர். இதில் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், சகோதரி சாந்தி மற்றும் மூன்று வயது குழந்தை படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ஆத்திரம் தீராத கும்பல் சண்முகத்தாய் மற்றும் சாந்தியை கொடூரமாக கழுத்தை அறுத்து கொரலை செய்து விட்டு தப்பிச்சனெற்னர். இதில் சாந்தியின் தலை துண்டானது. இதையடுத்து மூன்று வயது குழந்தையை அருகில் உள்ளளோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பழிக்கு பழிவாங்க பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாங்குநேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|