Posted by S Peer Mohamed
(peer) on 4/17/2021 8:59:16 PM
|
|||
-சாவித்திரி கண்ணன் நடிகர் விவேக் தன் இறப்பின் மூலம் அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்! கொரானா தடுப்பூசி போடுவதாலும், மற்றவர்களைப் போட வைப்பதாலும் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை செய்வதாக எண்ணி, தன் உயிரை பறி கொடுத்ததன் மூலம், உண்மையான விழிப்புணர்வை தந்துள்ளார்! அவருக்கு நம் கண்ணீர் அஞ்சலி. கொரானா தடுப்பூசியால் பல மரணங்கள் தொடர்ந்து சம்பவிக்கிறது என்பதை சென்ற அறம் பதிவிலும் எழுதி இருந்தோம். சமீபத்தில் ஆவடியைச் சேர்ந்த டாக்டர் பாஷா, பெரம்பலூரில் அரசு டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் கொரானா தடுப்பூசியால் மரணமடைந்தார் என்பதை பல ஊடகங்கள் மறைத்தன! அதே போல விவேக் விஷயத்திலும் மறைக்கிறார்கள். நடிகர் மன்சூன் அலிகான் தான் இதை துணிச்சலாக போட்டு உடைத்தார். அவருக்கு ஒரு சல்யூட்! இந்தியாவில் கோவிஷீல்டு தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர, ஆஸ்டிராசென்கா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றாலும் இரத்தம் உறையும் தன்மை பலருக்கு ஏற்ப்பட்டுள்ளது! இந்தக் காரணத்தால் மேற்படி ஆய்வுக்காக இவ்விரண்டு தடுப்பூசிகள் சில நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அறிவியலின் பெயரால் அபத்தங்களை நடைமுறைப்படுத்தாதீர்கள். கொரானா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் இந்தியாவில் கொரானா பரவல் அதிகமாகி வருகிறது. மருத்துவர்களிலேயே 60 சதவிகிதமானவர்கள் இதை போடவில்லை.ஆனால், முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு போடுகிறோம் என்று சொல்லி அந்த எளிய உழைப்பாளிகளை முன்களப் பலியாடுகளாக்கி வருகிறீர்கள். கொரானா தடுப்பூசி மூலமாக இங்கு ஒரு ஆபத்தான அரசியல் நடத்தப்படுகிறது. அதன் மூலம் பாஜகவும், மோடியும் ஹீரோ இமேஜை கட்டமைக்க துடிக்கிறார்கள்! இதற்கு நடுவில் அந்த தடுப்பூசியால் எத்தனை பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், எவ்வளவு ஆபத்துகள் நிகழ்ந்தாலும் அதை மறைத்தும், புறக்கணித்தும் இத்தனை கோடி பேருக்கு போட்டுவிட்டோம் என்பதை அறிவிப்பதில் தான் குறியாக உள்ளார்கள்! முதல் நாள் விவேக்கை வைத்து கொரனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வாக அவர் ஊசி போட்டுக் கொண்ட நிகழ்வை விளம்பரப்படுத்தினார்கள். அதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரே நாளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்கள். விவேக்கிற்கு நடந்தது வெளிப்பட்டுவிட்டது. மற்றவர்கள் விஷயம் வெளியே தெரியப் போவதில்லை. இது தான் விவேக்கிற்கு வந்த முதல் மாரடைப்பு. பொதுவாக முதல் மாரடைப்பு ரொம்ப மைல்டாகத் தான் இருக்கும். ஆனால் இவ்வளவு ஸ்டிராங்காக இருப்பது வியப்பளிக்கிறது என்று விவேக்கிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்களே கூறியுள்ளனர். ஆகவே கொரானா தடுப்பூசியின் தாக்கம் தான் உயிரிழப்புக்கான காரணம் என்பது உறுதிப்படுகிறது. ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பு மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவரின் உடல் நலன் குறித்து முதல்கட்ட விசாரண செய்திருக்க வேண்டும். இதன் மூலம் சிலரை முன் கூட்டியே போட கூடாதவர்கள் என தவிர்க்க முடியும். ஆனால்,விவேக் உட்பட யாருக்கும் அவ்வாறு செய்வதில்லை ஏன் என்றால், இவர்களுக்கு எண்ணிக்கை அதிகமாக காட்ட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாகும். நண்பர் பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் ஒரு சம்பவம் சொன்னார். அவரது நண்பர் மனைவி தடூப்புசியை போட்டு வந்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களாக இரவும், பகலுமாக தூங்கி வழிகிறார்! அவரால் எழுந்து நடமாட முடியவில்லை! இது போல சிலருக்கு முகம் வீங்கிவிட்டது. கை, கால்கள் சோர்ந்து படபடப்பு அதிகமாவதாக சொல்கிறார்கள்! நடிகர் பார்த்தீபன் தனக்கு கண்,முகம் ஆகியவை மிகவும் சிவந்துவிட்டதாகக் கூறினார். தடுப்பூசி போட்டாலும் கொரானா வருகிறதே..என்றால்..வரும் ஆனால், ஆபத்துகள் குறையும், பாதிப்புகளை குறைக்கும் என்று வாதம் வைத்தார்கள்! ஆனால், அதுவும் பொய் என்பது டாக்டர் பாஷா (Dr.pasha, anaesthaesist) மூலம் நிருபணமாகிவிட்டது. ஆவடியைச் சேர்ந்த டாக்டர் பாஷா காவேரி மருத்துவமனையில் இரண்டு கட்டமாக கொரனா தடுப்பூசி போட்ட பிறகு அவருக்கு கொரானா வந்தது. அவர் இறந்துவிட்டார். அதே போல பெரம்பலூரில் அரசு மருத்துவர் தர்மலிங்கம் இறந்துள்ளார். கொரானா தடுப்பூசி வந்த பிறகு இந்தியா முழுமையிலும் டாக்டர்கள் பலரே இறந்துள்ளனர் என்ற உண்மைகளை இன்னும் கூட விரிவாக விவாதிக்க முடியும்.சென்னை திருவான்மியூரில் டிராவல்ஸ் ஓனர் ஒருவர் தடுப்பூசி போட்டதால் மூன்று நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தானே அரசாங்கம் எந்த பக்க விளைவு ஏற்பட்டாலும் நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம் என்றும், நஷ்ட ஈடு தரமாட்டோம் என்றும் கூறிவிட்டது. இப்படி சொல்லி இருக்காவிட்டால் தற்போது நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கும், ஆயிரக்கணகான பாதிப்புகளுக்கும் நஷ்ட ஈடு தந்தே அரசு கஜானா காலியாகி இருக்கும். இந்தச் சுழலில் வீடுவீடாக கார்ப்பரேஷன் ஆட்களை அனுப்பி கொரானா தடுப்பூசி போட வாருங்கள் என நிர்பந்திக்கலாமா..? இது தொடர்பாக நமது வாசகர்கள் பலர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த கார்ப்பரேஷன் ஊழியர்களோடு விவாதித்து, அனுப்பி வைப்பதற்கு நாளும், நாளும் போராட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்! இதற்கு பின் ஏதாவது கமிஷன் உள்ளதா..? பொருளாதார அனுகூலம் உள்ளதா என்று தெரியவில்லை. Also read ஹரித்துவார் கும்பமேளாவும், அடங்காத அதிகார வர்க்கமும்! அழிவுப் பாதையில் மேற்கு வங்க அரசியல்! கொரானாவை வைத்து நடந்து கொண்டிருக்கும் நாடகங்களை முடிவுக்கு கொண்டு வந்து இயற்கையின் துணையோடு, பாரம்பரிய மருத்துவ அனுபவங்களோடு கொரானாவை எதிர்கொள்வோம். சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |