இந்திய ஒன்றியம் காங்கிரஸ் பேரியக்கத்தின் செயல்பாட்டால் எத்தனை வளர்ந்திருந்தது .. அறிவாளிகளை தன்னோடு வைத்திருந்தார் .. அபுல்கலாம் ஆசாத் தவிர்த்து என்னால் வேறோருவரை கல்வியமைச்சராக நினைக்கமுடியவில்லை என்றார் நேரு.. இப்போதும் பெரிதும் உதவும் மருத்துவ கட்டமைப்பெல்லாம் காங்கிரஸ் செய்தது தான் மூன்றுமுறை முதல்வராக இருந்த மோடி செய்ததெல்லாம் மதவெறியை தூண்டி கலவரம் கண்டதுதான் .. நவீன இந்தியா என வாய்சவடால் விட்ட மோடியின் முகம் கிழிந்து தொங்குகிறது..
ஆக்ஸிசன் இல்லாமல் உயிர்போகிறது.. திருடுங்கள் அல்லது பிச்சையெடுங்கள் என உயர்நீதிமன்றம் சொல்லும் அவலம்.. ஆம் தமிழகத்திலிருந்து மாநில அரசிற்கு தெரியாமல் திருடுகிற அவலம் Indian Court Urges Officials to 'Beg, Borrow or Steal' Oxygen as COVID Spike Causes Shortage (newsweek.com) .. மதவெறி அரசியலை கையிலெடுத்த கர்நாடக நிலை பரிதாபம், "நிலைமை கையை மீறி விட்டது. எங்களால் எதுவும் செய்ய இயலாத நிலைக்கு நாங்கள் வந்து விட்டோம்" நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.. உ.பியில் மிக மோசம் சாலையில் பிணங்களின் வரிசை .. ஒளிரவில்லை பிணங்களால் பற்றி எரிகிறது இந்தியா.. நானிருக்கிறேன் என தொலைக்காட்சியில் பேசினால் போதுமா.. செய்தியாளர்கள் சந்திக்க தைரியம் உண்டா .. ஆபத்பாந்தவன், அநாத ரட்சகன் என்றெல்லாம் மெழுகபட்ட பிம்பம் இன்று உருகுலைந்துப் போய்நிற்கிறது.. இன்றைய அவலநிலைக்கு ஊடகங்கள் மிகப்பெரிய காரணம் .. மன்மோகன்சிங்கை வீழ்த்த எண்ணியது எவ்வளவு பெரிய தவறென்பதை இப்போது உணருகிறார்கள் .. மோடி தேசிய பேரிழிவு என்றார் மாண்பிமை மன்மோகன்சிங் எத்தனை உண்மை.. .. தமிழகம் மருத்துவத்துறை சாதித்தைப்போல் வேறெந்த மாநிலமும் சாதிக்கவில்லை ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை ராஜீவ்காந்தி மருத்துவமனையை உருவாக்கியவர் கலைஞர் .. உலகில் 8 வது அதிகபடுக்கைகள் கொண்ட மருத்துவமனை இதெல்லாம் தமிழகத்தில் திராவிட ஆட்சியின் சாதனை .. தேவையான ஆக்ஸிசனை தயாரிக்கும் ஆற்றல் கொண்ட மருத்துமனை இந்த பேரிடர் காலத்தில் தொலைநோக்கோடு சிந்தித்து கட்டமைத்த #கருணையாளன்_கலைஞரை நினைத்து பார்க்கிறோம்.. .. முழுவதுமாக தோற்றுநிற்கிறது திறமையில்லாத அரசன் .. ஆணவத்தோடு பதில் தரும் மந்திரிகள் .. கைதட்டுங்கள் தீபமேற்றுங்கள் கோ கொரோனா என இசைபாடுங்கள் என அறிவுரை சொல்லும் அறிவிலிக்கூட்டத்தின் தலைவன், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என அகங்காரத்தோடு பதில் சொல்லும் ஆரிய திமிர் .. மக்களைப்பற்றி சிறுதும் கலலைபடாமல் மாட்டிற்கு முககவசம் மாட்டும் குரங்குகள், கைமீறி போன பின் மன்னிப்பு கேட்கும் மடையர்கள்.. ₹3000 கோடிக்கு சிலை வைத்தால் போதும் மருத்துமனைக்கு ஆக்ஸிசன் வாங்க தேவையில்லை சொந்த காசில் வாங்கி மக்களை குழந்தைகளை காப்பாற்றினால் தேசதுரோகி வழக்கு .. நாம் எந்தமாதிரி நாட்டில் வாழ்கிறோம்.. மிக கேவலமானவர்கள் கையில் நாடு .. .. மன்மோகன் சிங் போன்ற தன்னலமற்ற நாட்டை நேசிக்கிறவர்களை வேண்டாமென வைத்து குஜராத் மாடலென ஊடகவியாபாரிகள் கொண்டாடிய அடிமுட்டாளை கொண்டுவந்ததின் பலனை மக்கள் அனுபவிக்கிறார்கள்.. இப்போதும் வாய்சவடாலுக்கு பஞ்சமில்லை.. செத்துவிழுவது மனிதர்கள் தானே மாடு இல்லையே.. .. "நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்".. என்றான் வள்ளுவன்.. ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.. .. ஆலஞ்சியார்
|