Posted by S Peer Mohamed
(peer) on 5/11/2021 4:40:06 PM
|
|||
வழமைபோன்றே இந்த ரமழானிலும் பதற்ற நிலைமைகளாலும், மனிதாபிமானமற்ற தாக்குதல்களாலும் தவிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர் பலஸ்தீன மக்கள். ஜெருசலமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூத குடியேறிகள் தங்களுடையது என்று கூறும் நிலத்தில் இருந்து பலஸ்தீன குடும்பங்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதை தொடர்ந்து அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் – பலஸ்தீன் 4 ஆவது இரவாக தொடரும் தாக்குதல்களில் இதுவரை (9 சிறுவர்கள் உள்ளடங்களாக) 20 பேர் பலஸ்தீனில் பலியாகியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல நூறு பேர் காயம், பல பேர் அநியாயமாகக் கைது என இந்த நிலை நீடிக்கின்றது! புனித நோன்புப் பெருநாளும் அண்மித்திருக்கும் சூழலில் அல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினரின் மிக மோசமான தாக்குதல்கள், கண்ணீர் புகை வீச்சு, இருதரப்பு ரொக்கெட் தாக்குதல்கள், என பதற்றம் அதிகரிக்கின்றது. இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை துருக்கி, ஈரான், மெக்ஸிகோ, எகிப்து, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்டவை விரைவாக கண்டித்து வரும் இன்றைய நிலையில், அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன், ஸ்வீடன் ஐரோப்பிய ஒன்றிய தரப்புக்கள், இருதரப்பு சமாதானத்தை கோரி வருகின்றனர். பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு அல் அக்ஸா மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதுடன், முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமான மஸ்ஜிதுல் அக்ஸாவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக பிரார்த்திக்குமாறு அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா வேண்டுகிின்றது. 11-05-2021 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |