Posted by S Peer Mohamed
(peer) on 5/17/2021 9:45:37 PM
|
|||
வணக்கம். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் முகங் காட்டி வருவதைக் கண்டு எங்கள் குழந்தைகள் இந்த தாத்தா யார் எனக் கேட்கும் போது நமது பிரதமர் எனச் சொல்ல முடியாமல் தலை குனிந்து கிடப்பது வெளிநாடுகளெல்லாம் நம்மை கேலியாகப் பார்க்கிறதே அதைப் பார்த்து வெட்கப்பட்டு கிடக்கிறோமே அது உங்களுக்கு தெரியுமா? பிரதமர் அவர்களே. ஒரு நதியில் தண்ணீர் ஓடலாம் . அதில் மீன்கள் விளையாடலாம் ஆனால் பிணங்கள் முண்டியடித்துக்கொண்டு போவதற்கு சண்டை போடுகிறதே அதை அறிவீர்களா பிரதமர் அவர்களே. பட்டேலைப் பற்றி கவலைப்பட்டீர்களே மாடுகளைப் பற்றி அம்பானி பாரதமே பிணங்களாக இதெல்லாம் இருக்கட்டும்... கொரணாவைத் தடுக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன? முதல் அலையில் பாதித்த பல நாடுகள் விழித்துக் கொண்டு விட்டன. ஆனால் நீங்களோ இங்கே தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பத்து தினங்களில் மக்களுக்கு அத்தனை நிவாரணங்கள். மருத்துவர்கள் முடுக்கி விடப்படுகிறார்கள். செவிலியர்கள் அன்போடு பணியாற்ற பணிக்கப் படுகிறார்கள். ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் துவங்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அனைத்துக் கட்சியினரை அழைத்து ஆலோசனை கேட்கப்படுகிறது. மாவட்டந்தோறும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு களத்தில் நின்று போராடுகிறார்கள். இதற்கிடையே இதைச் சமாளிக்க நிதி திரட்டப்படுகிறது. மக்களின் குறைகளைக் கேட்டறிய #வார்ரூம் திறக்கப்படுகிறது. அதில் இரவு 11 மணிக்கு சென்று ஒரு முதல்வர் ஆய்வு நடத்துகிறார். எந்த மக்களையும் சிரமப்படுத்தாமல் அதே சமயத்தில் இந்த நோயை லிரட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் இது சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறது. மாண்புமிகு பிரதமர் அவர்களே... இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் நீங்கள் எடுத்த முன்னெடுப்பு என்ன?? நீங்கள் தொடங்கிய ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் எத்தனை?? நீங்கள் மாநிலங்களுக்கு கொடுத்த நிவாரணத் தொகை எவ்வளவு?? தடுப்பூசி உற்பத்தி ஆலைகள் துவங்குவதற்கு நீங்கள் எத்தனை பேருக்கு அனுமதி கொடுத்தீர்கள்?? அதற்கு முன்னுரிமை கொடுத்தது உண்டா?? இப்போது தட்டுப்பாடாக இருக்கும் #ரெம்டெவிசர் மருந்தை ஏன் அதிகமாக உற்பத்தி செய்ய அனுமதிக்க வில்லை??. கட்சிகளை உடைக்கவும் ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு மடங்கு கூடி இந்த கொரோனா விசயத்தில் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இதுவரையில் எதிர்கட்சிகளை பழிவாங்கிய ஆட்சியை பார்த்திருக்கிறேன். ஓட்டுப் போடாத மக்களை பழிவாங்கிய ஆட்சியைப் பார்த்து இருக்கிறேன். ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. அவர்களை புதைகுழிக்கு அனுப்பியதை இப்போதுதான் பார்க்கிறேன். நீங்கள் ஒருவராக குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய உங்களுக்கு பெரிய மைதானத்தில் குதிரை ரேசில் ஜெயிக்க முடியவில்லை தோற்றுப் போய்விட்டீர்கள். உங்களையும் தேற்ற முடியாது... உங்கள் நிர்வாகம் உங்கள் கைகளில் இல்லை. எல்லை மீறி போய்விட்டது. எத்தனையோ மன்னர்கள் போரைக் கையாளத் தெரியாமல் மக்களை பழி கொடுத்ததை படித்திருக்கிறேன். ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியிடம் தோற்று விழி பிதுங்கி நிற்கிறீர்கள். இந்த நாடு சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் ஒருவரை இழந்து தவிக்கிறது. நீங்கள் ஒருவர் பதவியை இழந்து விட்டால் இனிமேலாவது நாடு இழப்பதைத் தவிர்க்கலாம். நீங்கள் எங்களுக்கு கொள்கை அளவில் பிடிக்காதவர் என்பதற்காகச் சொல்லவில்லை. இந்த நாட்டு மக்களின் உயிர் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். மாண்புமிகு #பிரதமர் அவர்களே... #நாடுநலமடையட்டும். நன்றி...🙏 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |