Posted by S Peer Mohamed
(peer) on 6/2/2021 4:07:03 PM
|
|||
💧🩸💧🩸💧🩸💧🩸💧🩸 தமிழ்நாடு நிதியமைச்சர் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது கையில் ஒரு பெட்டியுடன் சட்டமன்ற படிக்கட்டில் ஏறுவது போல் காட்சி தருவார். தவிர அவர் குறித்த பெரிய தகவல்கள் ஏதும் வராது . ஏன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட அரிதினும் அரிது. ஆனால் நிதியமைச்சக பணி என்பது சாதாரணமானது அல்ல. தமிழ்நாட்டின் தலையெழுத்தை எடுத்துகொண்டால் ஓபிஎஸ் , ஜெயக்குமார் போன்றர்வர்கள் எல்லாம் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ? இத்தனை நாட்களாக. நாலு நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் தமிழ்நாடு தப்பி வந்திருக்கிறது தமிழ்நாடு நிதியமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் ஒரு மாநிலத்தின் நிதி நிலைமையை கவனிப்பது உண்மையில் தமிழ்நாட்டிற்கு வலிமை. சரி ! அவர் ஏன் இத்தனை விமர்சனத்திற்கு உள்ளாகிறார் ? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் கேட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமனால் பதில் தரமுடியவில்லை. மாறாக கோவா அமைச்சரையும் வானதி சீனிவாசன் போன்ற அரைவேக்காடு சங்கிகளையும் வைத்து நிதியமைச்சரை சீண்டிப்பார்க்கிறார். இதையெல்லாம் கடந்து வரும் அளவிற்கு உளவியல் தெரியாதவர் அல்ல நிதியமைச்சர். வானதியை ஒரு Congential Liar என்று பதில் அளிப்பதின் மூலம் அவர் தனிப்பட்ட வானதிக்கு பதில் தரவில்லை. ஒரு உளவியல் ரீதியாகஅந்த வார்த்தையின் ஆழத்தை எண்ணி சிரித்துகொண்டிருக்கிறேன். நிதியமைச்சரின் இந்த சொல்லாடல் ஒட்டுமொத்த சங்கிகளின் டி.என்.ஏ.வையே எள்ளி நகையாடுகிறது. அடுத்து கோவாவுக்கு ஏதோ இழுக்கை ஏற்படுத்திவிட்டது போல் அம்மாநில மவுன் கோடின்கோ நிதியமைச்சர் பிடிஆர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற எகிறினார். அதனை தனது இடது கையால் சாதரணமாக கையாள்கிறார் நிதியமைச்சர். உனக்கு என்ன பதில் சொல்வது ? நான் கோவா மக்களுக்கு உனது முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறேன் என்று அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பு கோவா இளசுகளிடையே டிரெண்டிங்கில் உள்ளது. "நான் என் மாநிலத்திற்காக பேசவில்லை. கோவாவின் மாநில உரிமைக்காகவும் தான் பேசுகிறேன்" என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும் வரை மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது. எங்கள் நிதிநிர்வாகத்தை ஒன்றிய கட்டுபாட்டில் இருந்து விடுவியுங்கள் என்று அவர் எழுப்பும் கூக்குரல் பற்றி பாமரனும் அறிந்து வைத்திருக்கிறான். இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. இன்னும் கேட்டால் தமிழ்நாடு முதல் மாநிலமாக கூட இருக்க கூடும். நமது மாநிலத்தில் இருக்கும் பல நிறுவனங்களில் நிர்வாக அலுவலகங்கள் மும்பையில் இயங்குவதால் வருவாய் செலவு கணக்குகள் அங்கிருந்து தாக்கல் செய்யப்படுவதால் மகாராஷ்டிராவுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறது. இப்படி எல்லா வளமும் கொண்ட ஒரு மாநிலத்தின் லகானை ஒன்றிய அரசு பிடித்து வைத்திருப்பது எந்தவிதத்திலும் நாயம் இல்லை. கூட்டாட்சி தத்துவத்தின் படி இயங்கவேண்டும் என்பதை திரும்ப திரும்ப சொல்கிறார் நிதியமைச்சர் பி டி ஆர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த இந்த விவகாரத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு எழுப்பியிருக்கிறார்.இதே சிந்தனையுடைய பஞ்சாப், மஹாராஷ்டிரா,ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் இப்பொழுது விழித்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இது மத்திய அரசுக்கு புதிய உதறலை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஆகவே தான் நிதியமைச்சர் அதிகம் விமர்சிக்கப்படுகிறார். காய்த்த மரம் தான் கல்லடி படும். மத்திய அரசு வீசும் கற்களைகொண்டு அழகாக ஒரு மாளிகையை அமைக்கும் வித்தை இவருக்கு இருப்பதாக உணர்கிறேன். இவர் அதிகம் பேசவில்லை . அறிவுபூர்வமாகவே பேசுகிறார். 😎PTR அவர்களின் குடும்ப பாரம்பரியத்துக்கும் அவரின் கல்வி தகுதிக்கும் அரசியல் பொருளாதார நிர்வாக அனுபவத்திற்கும் சவுக்கடி போன்ற பதில்களுக்கும் இந்த சங்கிகள் அவரிடம் நேருக்கு நேராக நேர்மையான முறையில் விவாதிக்க முடியாது. -WA : Habeeb Kasib |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |