Posted by S Peer Mohamed
(peer) on 6/6/2021 4:05:49 PM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும். நமதூரில் corona 2 ஆம் அலை தற்போது தான் சற்று தளர்ந்து வருகிறது. எனினும், நாம் அறியும் நோயாளிகள் எண்ணிக்கையை விட சுமார் 10 மடங்கு அதிகம் இருக்கும் என்பது கணிப்பு.. இன்றளவும் கொரோனா காரணமா க மரணமும், ICU admission போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இந்த அலை முழுவதும் கட்டுக்குள் வர சில வாரம் ஆகலாம். இதற்கு நமது ஒத்துழைப்பு மிக அவசியம். Corona தொற்றின் சங்கிலி தொடரை முறியடிக்க தான் அரசு முழு போதுமுடக்கம் அறிவித்து உள்ளது.. அதை நாம் மிகவும் strict ஆக கடை பிடித்தால் தான் ,இந்த கொடிய நோயின் பிடியில் இருந்து மீள முடியும். 2ஆம் அலையின் தாக்கம் மிகவும் வீரியம் மிக்கதாகவும், அதி விரைவில் பரவும் தன்மையும் கொண்டதாக இருக்கிறது. இதுவரை, இந்த Corona வின் கோர தாண்டவம் காரணமாக, பல இளம் விதவைகள், அனாதை குழந்தைகளை உருவாக்கி இருக்கிறது. பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி, வருங்கால பொருளாதாரம் அதாள பள்ளத்தில் செல்லும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு வீட்டிற்க்கு ஒரு பாதிப்பாவது இல்லாமல் இல்லை. சில வீட்டில் பல மரணங்களும் நிகழ்ந்து உள்ளது..மரணங்கள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம். இத்தனையும், நம் கண் முன்னால் பார்த்து கொண்டு, இன்றளவும் பலர் ரோட்டில் கூட்டமாக சமூக இடைவெளி இன்றி நிற்பதையும்,தேவை இல்லாமல் வெளியில் சுற்றுவதையும், மாஸ்க் கூட அணியாமல் இருப்பதையும் கண்கூடாக பார்த்து வருகிறோம். அடுத்த 3 ஆம் அலை என்று ஒன்று வந்தால், அதில் தப்பி மீதம் இருப்போர், கொடுத்து வைத்தவர்கள் என்று மருத்துவர்கள் குழுவில் பதிவுகள் கூறுகின்றன. 3 ஆம் அலையை தடுக்கும் ஒரே ஆயுதம் covid19 தடுப்பூசி. அதுவும் இன்னும் 10 சதவிகித மக்கள் கூட போடவில்லை. ஆக புரட்டி போட்ட 2 ஆம் அலையை மட்டுபடுத்தவும் , நம்மில் பலர் ஒத்துழைக்க வில்லை. வரும் என்று எதிர் பார்க்கின்ற கொரோனா 3 ஆம் அலையை தடுக்கும் செயலிலும் மும்மரம் காட்டும் எண்ணம் இல்லை. இந்நிலையில், சென்ற இரு வாரம் வெள்ளிக்கிழமைகளில், ஒரு சில இடங்களில் கூட்டாக மைதானத்தில் ஜும்மா தொழுகையில் ஈடு பட்டதாக நம்பத் தகுந்த செய்தி வெளிவருகிறது. வல்ல இறைவன் நம்மை நாம் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டான். இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமுலில் உள்ள பல நாடுகளில் கூட பல மாதம் வரை பள்ளிகளில் ஜும்மா உட்பட எல்லா கூட்டு தொழுகைக்கு தடை விதித்து இருந்ததை நாம் அறிவோம்.. Epidemiological survey , Corona தொற்று கிளஸ்டர் ஆக பரவும் வாய்ப்பு ,மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மிக அதிகம் உள்ளதாக கூறுகிறது.. அதுவும் இறந்த உடல் இறுதி மரியாதை செய்யும் இடம் மற்றும் மதரீதியான வணக்க வழிபாடு தளங்களில் தான் அதிகம் பரவுகிறது. எனவே புரட்டு போட்ட இரண்டாம் அலையை முழுவதும் கட்டுபடுத்த, அவசியம் இல்லாமல் வெளியே வராதீர்கள். வரும் நிலை வந்தால் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி, தேவை முடிந்த உடன் வீடு திரும்பி விடுங்கள்.. மசூதிகள் திறக்கும் வரை ,கூட்டாக தொழுகை அழுவல்பூர்வ மின்றி நடத்துவதை தவிருங்கள் ( அல்லாஹ் குற்றம் கண்டுபிடிக்க மாட்டான்). தேவை அற்ற கூட்டத்தை அறவே தவிருங்கள். மரண வீடுகளில், மிக close உறவினர் தவிர மற்றவர் செல்வதை தவிர்த்து, மரணித்தவற்களுக்காக, அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். இதை இன்னும் 2 or 3 வாரம் கடை பிடித்தால், 2 ஆம் அலை அறவே ஒழித்து விடும். இல்லையெனில், நம் கையை மீறி சென்று , பெரும் devastation பாதிப்பை ஏற்படுத்தலாம். நம் செயலால், நாம் கிட்டத்தட்ட சமூக தற்கொலைக்கு சமமான சூழலுக்கு , சமூகத்தை தள்ளி விட கூடாது. ( இறைவன் காப்பானாக).. 3 ஆம் அலை உண்டு என்று மருத்துவ உலகம் சொல்வதை தவிடுபிடி ஆக்க, நீங்களும் தடுப்பூசி போட்டு, மற்றவர்களையும் தடுப்பூசி போடும் படி தூண்டுங்கள்.. தடுப்பூசி போட்டாலும் மாஸ்க், சமூக இடைவெளி மறக்க வேண்டாம். வல்ல இறைவன் நம்மை இந்த பெரும் நாசகார தொற்றில் இருந்து , காப்ப்பானாக. Dr D Mohamed kizhar.. (whatsapp share) |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |