Posted by S Peer Mohamed
(peer) on 6/6/2021 4:27:13 PM
|
|||
ஒன்றிணைவோம் வா பொருளாதார வல்லுனர்களையும், கலைஞரின் மகனார், செயல் முதல்வர் ஸ்டாலின் அவர்களே.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்தபோது 1971ல் ‘திட்டக் குழு’ ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவர்: முதல்வர். துணை தலைவர்: சர்வ சுதந்திரமான செயல் படுபவர். இதை கடந்த 2020ல் ‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழு’வாக பெயர் மாற்றம் செய்து வெத்து நடை போட்டு கொண்டிருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இதன் துணை தலைவர் யார் யார்? மாநில வளர்ச்சி கொள்கை குழுவில்: Dr: சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள். புதுக் கல்லூரி விரிவுரையாளர் முதல், மண் புழு ஆராச்சியாளர் வரை, மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் முதல், MS சுவாமிநாதன் அறக்கட்டளை வரை, அனைவருக்கும் வழிகாட்டி. எனக்கும் தான். 21 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களை பற்றி கேள்விப்பட்டு ECR சாலையில் உள்ள இவர்களின் வீட்டில் போய் சந்தித்தேன். அப்போதுதான் வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கிய களைப்பையும் பொருட்படுத்தாமல் எங்களை சந்தித்து பேசினார்கள். அவர்கள் எழுதிய மண் புழு பற்றிய புத்தகத்தையும் வழங்கினார்கள். மண் புழு உரம் சம்பந்தப்பட்ட அனைத்து என்னுடைய அனுபவத்துக்கும் இவர்களே முன்னோடி. தேனி மாவட்டத்தில் 2000 முதல் 2008 வரை மண் புழு உர உற்பத்தியில் முடிசூடா மன்னனாக திகழ்ந்ததற்கு இவர்களே காரணம்.
இவர்களை தேடி கண்டுபிடித்து, இவர்களுக்கு இப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார் மக்களுக்கான முதல்வர். இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து மிகச்சரியான நபர்கள். மிகச்சரியான தேர்வு. எங்கள் இறைவா! உன்னுடைய மாபெரும் கிருபையால், மிக இனிதாக, பரிபூரண நலமாக, மிகுந்த வளமாக, எங்கள் தமிழ்நாட்டு மக்களும், அதை முன்னுதாரணமாக கொண்டு, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும், முக்கியமாக: தொலைகாட்சிகளில் தோன்றி, தொல்லை தரும், வலதுசாரி போலி பொருளாதார வல்லுனர்களின் தொல்லையில் இருந்தும் எங்களை நீ பாதுகாத்து அருள்வாயாக. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |