Posted by S Peer Mohamed
(peer) on 9/9/2021 8:38:17 AM
|
|||
இரண்டு மார்பகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன! பிறப்புறுப்பு குத்திக் கீறப்பட்டுள்ளது..! அவள் இறப்பதற்கு சற்று முன்பு நான்கு பேருக்கும் அதிகமானோர் கற்பழித்துள்ளனர். ஒரு மனித உடல் தாங்க முடியாத அளவிற்கு வேதனை. அசையக் கூட முடியாமல் அவள் இறுதியில் இறந்து விடுகிறாள். மேற்கண்ட அதிர்ச்சியூட்டும் வரிகள் திரைப்படம் அல்லது நாவலின் பகுதிகள் அல்ல. குப்பை பொறுக்கியும் வீட்டு வேலை செய்தும் கிடைத்த பணத்தில் ஒரு தாயால் காவல்துறை அதிகாரியாக உருவான அவரது மகள் , அவள் வேலைக்குச் சென்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் தவறுகளுக்கு துணை போகாததன் காரணத்தால் மனிதத்தையும் மனசாட்சியையும் குப்பைத் தொட்டியில் வீசிய நமது ஜனநாயக நாட்டின் மக்கள் ஊழியர்களால் தண்டிக்கப்பட்டாள். அவள் பெயர் ராபியா ஷைஃபி. வயது 21. கொல்லப்பட்டது - ஆகஸ்ட் 26. டெல்லி லஜ்பத் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரி. யாரும் மெழுகுவர்த்தி ஏந்தவில்லை. தெரிந்தவர்கள் கூட சொல்லவில்லை. ஆனால் இது போன்ற ஒன்று நடந்திருக்கிறது. கேட்டால் தலை வெடித்துவிடும், உடல் தளர்ந்து விடும் ஒரு பெரும் கொடூரத்தை சில கொடூரர்கள், நர வேட்டைக்காரர்கள் ஒரு பெண்ணின் மீது, ஒரு பாவப்பட்ட தாயின் மகளின் மீது செய்துள்ளனர். ஆகஸ்ட் 26 இரவு, ராபியாவைப் காணவில்லை என்றவுடன், அவளது குடும்பத்தினர் அவளது சக ஊழியர்கள் உட்பட பலரை அழைத்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு சக ஊழியர் அவளது அம்மாவை அழைக்கிறார். அழைப்பு பதிவு செய்யவில்லை என்பதை ஆரம்பத்தில் உறுதி செய்த பிறகு, அவர் சில விஷயங்களை கூறியுள்ளார். ராபியாவை அவருடன் பணிபுரியும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்படுவாள் என்று கூறியுள்ளார். அவரது மேலதிகாரியின் தொலைபேசி எண்ணைக் கேட்டபோது, அந்த சக ஊழியர் கொடுக்க மறுத்ததுடன், அவரும் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார். பின்னர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற ராபியா குடும்பத்தினரை உட்காரச் கூடச் சொல்லாமல் வழக்கை முன்னதாகவே பதிவு செய்து விட்டோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம் என்று கூறி அவர்களது வாக்குமூலத்தை கூட பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவரது தந்தை சமித் அகமது கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு இரகசிய அறை இருப்பது தனது மகளுக்குத் தெரியும் என்றும் லஞ்சப் பணமாக தினமும் ரூ. 3-4 லட்சம் வருவதாக ராபியா கூறியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தகவலை அறிந்ததனால் தான் ராபியா கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அவளது அலுவலகத்தில் நடந்த ஊழல் குறித்து அவள் பலரிடம் புகார் அளித்துள்ளதாகவும், டெல்லியில் ராபியா என்ற போலீஸ் அதிகாரி ஒரு சிலரால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உறுப்புகள் ஒவ்வொன்றாக சிதைக்கப்பட்டன என்பதை நாடு அறிய பல நாட்களானது என்பது மட்டுமின்றி, இங்கேயுள்ள அரசும் சட்டவியல் அமைப்புகளும் தலைவர்களும் முக்கிய ஊடகங்களும் நடந்த கொடுமைகளை அறிந்திருந்தும், அமைதியாக இருக்கிறார்கள். இது வகுப்புவாதம் நிரம்பிய வஞ்சனையாகும். ஒரு பெண்ணுக்கு எதிராக மட்டுமல்ல, ஒரு சமூகத்திற்கு, இந்த நாட்டிற்கு, இங்கே உள்ள நீதி நெறிமுறைகளுக்கு, அனைத்துவிதமான சட்ட முறைமைகளுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் இடைவிடாமல் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம். அந்த குடும்பங்களுக்காக மட்டும் கட்டமைக்கப்பட்ட சனாதன பொது புத்தியின், சட்ட அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு அதிகாரிக்கே இது போன்ற மோசமான நிலை ஏற்பட்டிருப்பது பயத்தை உருவாக்குகிறது. அதுவும் தலைநகரில்! நமது நாடு ஜனநாயகத்தில் இருந்து தடம் புரண்டுவிட்டது. வேட்டைக்காரர்களுக்கு எல்லைகள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் இரைகளை மட்டுமே பின் தொடர்கிறார்கள். டெல்லியில் இருந்து நமது பகுதிகள் அதிக தூரம் இல்லை. ராபியா ஷைஃபி, ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தன் உயிரைக் கொடுத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண்ணின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவளது மேலதிகாரிகளின் கொலை வெறியால் இல்லாமல் போனது பல ஆசைகள் கொண்ட ஒரு பெண். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |