Posted by S Peer Mohamed
(peer) on 9/13/2021 4:48:55 AM
|
|||
சமூகப்பணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏர்வாடி பிரைமரி ஏர்வாடிவடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல வருடங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் பல கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது இவைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க இயலாத நிலையில்இருந்தது ஆகவே அவைகளுக்கு முறையான கட்டிடம் வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு தலைமையாசிரியர்அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் ஏர்வாடி பிரைமரி நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி முகம்மது ஷாஃபி அவர்கள் தலைமையில் களத்தில் இறங்கி ஏர்வாடி புரவலர் சிட்டிகோல்டூ ஹாஜி முஸ்தபா மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்புகொண்டு நமக்கு நாமே திட்டத்தில் ஊர்மக்களின் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாய் செலுத்தி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை கட்டி முடிக்கப்படாத நிலையில் மேலும் சில கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் அதனையும் சீரமைத்து தரும்படியும் கேட்டு கடந்த ஜூலை மாதம் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி முகம்மது ஷாஃபி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிச்சையா அவர்களைதொடர்பு கொண்டு அவரை பள்ளிக்கூடத்திற்கு வரவழைத்து பள்ளி கட்டிடங்களின் அவல நிலையை எடுத்துக்காட்டி புகார் மனு ஒன்றை அளித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்அவர்கள் உடனடியாக பணியை முடித்து தருவதாகவும் கட்டிடங்கள் ssa திட்டத்தில் ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார் அதன் அடிப்படையில் மா.து. தலைவர்அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வேகமாக முடிக்க ஏற்பாடு செய்தார்கள். இப்போது மூன்று வகுப்பறைகளுடன் கூடிய ஒரு கட்டிடம் மற்றும் மாணவிககளுக்கான கழிப்பறையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது மேற்கொண்டுள்ள கட்டிடங்களை செப்பனிட்டு பராமரித்தல் பழைய கட்டிடங்கள் எடுத்துவிட்டு புது கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் மாவட்டத் தலைவர் ஜனாப் அவர்கள் L.K.S.மீரான் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரை கண்டு ஏற்பாடு செய்யவும்முடிவுசெய்யப்பட்டது. மேலும் கொரோனா காலகட்டத்தில் மாணவமாணவிகள்மற்றும் பெற்றோர்கள் மிகவும் மன அழுத்தத்தில்இருந்ததின் காரணமாக பலகுடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுஇருப்பதைகருத்தில் கொண்டு இ.யூ முஸ்லிம் லீக்மகளிர் அணியின் மூலமாக மனநிலை மருத்துவர்கள் மூலம் மன நல ஆலோசனை ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |