Posted by S Peer Mohamed
(peer) on 3/28/2022 11:36:41 AM
|
|||
----------------------------------------------- ============================ 24 வியாழன் மாலை, துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மர்ரி, அயல் நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் தானி பின் அகமது அல் சியோதி, அபுதாபி தொழில் வர்த்தக சங்கத்தின் ( Abu Dhabi Chamber of Commerce and Industry (ADCCI) துணை தலைவர் லூலூ யூசுப் அலி ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இந்த சந்திப்பின் போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழகத்துக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 19 லட்சம் கோடிக்கும் அதிகமான நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் (NSDP) , பொருளாதாரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. இந்திய நாட்டில் முன்னுதாரண மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்ற முதல்வரின் வேட்கை பல தொழில்வாய்ப்புகளை பெருக்க உதவுகிறது. காலம் காலமாக தமிழக முஸ்லிம்களுக்கு பொருளீட்டும் முறை என்றாலே வாணிபம் தான் என்ற நிலை மாறி மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. நேர்த்தியான திட்டமிடலுடன் செயல்பட்டால் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் தொடங்கி விமான உதிரிபாகங்கள் வரை அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்யலாம். கடலை கிழித்து பாய்மரக்கப்பலில் பயணித்த தமிழக முஸ்லிம்களின் அயல்நாட்டு வாணிபம் மீண்டும் கோலோச்ச சர்வதேச சந்தையுடன் இந்திய அரசின் நகர்வுகளையும் கூர்ந்து கவனித்தாலே போதுமானது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |