Posted by S Peer Mohamed
(peer) on 7/17/2022 3:11:50 PM
|
|||
இப்படி மையப் பொருள் கொண்ட அறிக்கை ஒன்றை நம் நாட்டில் உள்ள எல்லா பத்திரிக்கையாளர் குழுமங்களும் ஒன்றாய் இணைந்து வெளியிட்டுள்ளன . இதைத்தான், என். ராம் அவர்கள், காயிதே மில்லத் அவர்களின் பெயரால் வழங்கப்பெற்ற விருதின்போது குறிப்பிட்டார்கள் அதனை அப்படியே இங்கே தருகின்றோம். ஊதி வளர்க்கப்படும், வெறுப்பின் உச்சத்தில் மௌனம் காப்பது நீதி அல்ல. பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகிய நாங்கள் இந்த கோரிக்கையை எல்லாம் நிறுவனங்களிடமும் "(Indian Institutions)" வைக்கின்றோம். நீங்கள் தயைகூர்ந்து விழித்துக் கொள்ளுங்கள் உங்கள் மீது அரசியல் அமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். குறிப்பாக இந்தியாவில் வாழும், மத சிறுபான்மையினர் மீது, குறிப்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்த்து கொலை பாதகங்களை நிறைவேற்றும் இந்நாளில் உங்கள் கடமையை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம். வெறுப்பை தண்டோரா போட்டு வளர்க்கும் இன்றைய இந்த நிலை, கடந்த சில வருடங்களாகவும் மாதங்களாகவும் அதிவேகத்தில் வளர்ந்து வருகின்றது. அதேபோல்தான் (மத சிறுபான்மையினருக்கு எதிரான) வன்முறை தாக்குதல்களும். அதற்கு வக்காலத்து வாங்கும் பிரச்சாரங்களும். சில நேரங்களில் இந்த பிரச்சாரங்கள், தேர்தல் நேரங்களில் நடக்கின்றன. சில நேரங்களில், அரசியல் கூட்டங்கள், சில நேரங்களில் அது "தரம் சன்சாந்த்" அல்லது சில நேரங்களில் ஆடை அணிவதாக இருக்கலாம். அல்லது ஓர் திரைப்படத்தை வெளியிடுவதாக இருக்கலாம். இப்படி பல்வேறு நேரங்களிலும் செய்யப்படும் வெறுப்பு பிரச்சாரங்கள், விடுக்கப்படும் வன்முறைக்கான அறைகூவல்கள். ஊடகங்களில் பரவலாகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த நாட்டினுடைய பெரிய தலைவர்கள், இதுகுறித்து மெளனம் சாதிக்கின்றார்கள். இந்த மெளனம் திட்டமிட்டுக் காக்கப்படுவதாகும். பல மாதங்களுக்கு முன்னாள் நாம் ஒரு சூழலைச் சந்தித்தோம். அது கொரோனாவைக் காரணங்காட்டி முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்த்தார்கள். சில மாநிலங்களில் சட்ட மன்ற உறுப்பினர்கள் அவர்களை சமூக ரிதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்க வேண்டும் எனப் பேசினார்கள். மக்கள் கபளீகரப்படுத்தும் அளவில் கொரோனா ஜிஹாத் என்ற சொற்களை ஊடகங்கள் ஊதி பெரிது படுத்தின. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை, சமுதாயப் புறக்கணிப்புச் செய்திட வேண்டும். பொருளாதாரப் புறக்கணிப்புகளுக்கு உள்ளாக்கிட வேண்டும் என்பதெல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் அல்லது பேச்சுச் சுதந்திரத்தின் கீழ் நிச்சயமாக வராது. அதனால் இந்த வெறுப்புப் பேச்சுகளுக்கு அரசியல் நிர்ணயச் சட்டத்தில் பாதுகாப்பு இல்லை. ஆனாலும் ஒன்றிய அரசின் அதிகாரிகளோ, மாநில அரசின் அதிகாரிகளோ இந்த வெறுப்பு (விஷத்தை) கக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் தங்கள் மீது அரசியல் அமைப்பு சுமத்திய கடமைகளை நிறைவேற்றிடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்கள் அதை விரும்பவில்லை. சிறுபான்மையினர் மீது வெறுப்பை வளர்த்து வன்முறையை ஏவிவிடும் இந்த நபர்கள் மீது வழக்குத் தொடுத்தாலும் சம்மந்தமில்லாத குற்றப்பிரிவுகளின் கீழ்தான் வழக்கை தொடுக்கின்றார்கள். அதுவும் உப்புச்சப்பற்ற பிரிவுகளின் கீழ்தான் வழக்குகளை பதிவு செய்கின்றார்கள். அதிகாரிகளின் போக்கு எப்படி இருக்கின்றது என்றால் வெறுப்பை விதைத்து வன்முறையையும் இந்த செயல்களை செய்பவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என அதிகாரிகள் நினைக்கின்றார்கள் இப்படி ஒரு மனநிலை அவர்களிடம் வந்துள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதேபோல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியாவின் தேர்தல் ஆணையம் இன்னும் அரசியல் நிர்ணய சட்டம் உருவாக்கிய பல்வேறு நிறுவனங்கள் அனைத்தும் தோற்றுப்போய் விட்டன. இவற்றில் எதுவும் பெரிதாக ஒரு பேரழிவு நடப்பதற்கு முன் தடுக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பெரும் இனப்படுகொலை இங்கே நடக்கலாம். ஊடகங்களில் பெரும்பாலான இந்த வெறுப்பு பேச்சுக்களை பரப்பிடும் வாகனங்களாக பயன்படுத்துகின்றனர். இதனால் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்ற பத்திரிகையாளர்களின் 2022 டிசம்பர் முதல் இடைவிடாமல் ஒருபெரும் கூப்பாடு முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அளித்தாக வேண்டும் என்பதாக போடப்பட்டு வருகின்றது. இதை ஹரித்துவாரில் 2021 டிசம்பரில் நடந்த "தரம் சம்சாத்" என்ற பெயரில் கூடிய கும்பல் ஒன்று தொடங்கி வைத்தது. 2021 - 2022இல் சமூக தளத்தில் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். அதில் மிகவும் கேவலமான புள்ளிபாய் செயலி (Bulli Bai App) -யும் அடங்கும். கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை கிளப்பிய, மிகவும் அசிங்கமான ஹிஜாப் - விவகாரம், முஸ்லிம் பெண்களை நாட்டின் இதரப் பகுதிகளில் தாக்குவதற்கும் கொடுமை படுத்துவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் வழிவகுத்தது. 2022-ல் பிப்ரவரி திங்களில் 5 மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது நட்சத்திர பேச்சாளர்கள், முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கும் எதிராக தொடர்ந்து வெறுப்பை விதைத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த பேச்சாளர்கள் வெட்கமின்றி மதத்தின் பெயரால் மக்களிடம் வாக்குக் கேட்டார்கள். எந்தக் கூச்சமுமின்றி தேர்தல் விதிகள் அத்தனையும் மீறினார்கள். ஆனால் இந்தியாவின் தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அது அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட, சுதந்திரமான நிறுவனம் என்பதை நிரூபிக்க தவறிவிட்டது. அண்மைக் காலத்தில் "கஷ்மீர் கோப்புகள்" என்ற திரைப்படம் வழியாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை வளர்க்கும் முயற்சிகளைச் செய்தார்கள். இதில் கஷ்மீர் பண்டிட்டுகளின் துயரங்களுக்கு முஸ்லிம்களே காரணம் என காட்டி மக்களின் கோபங்களை முஸ்லிம்கள் மீது திருப்பிவிட்டார்கள். இதனை பயன்படுத்தி திரை அரங்குகளில் உள்ளேயும், வெளியேயும் முஸ்லிம்களின் மீது வெறுப்பை வளர்க்கவும், அவர்களை தாக்கவும் தூண்டிவிடப்பட்டன. அந்தப் படத்தை விமர்சனம் செய்ய எழுந்த குரல்களையெல்லாம் நசுக்கி அதிகாரத்தின் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். அரசியல் நிர்ணயச் சட்டம் உருவாக்கிய அமைப்புகள் மட்டுமே இந்த மொத்தச் சூழலையும் கட்டுப்படுத்தி இருக்க முடியும். இன்றைய இந்தியா மிகவும் ஆபத்தான ஓரிடத்தில் நிற்கின்றது. நம்முடைய மதச்சார்பற்ற விழுமியங்கள் குடியாட்சித்தத்துவங்கள், அதனை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டங்கள் இவற்றையெல்லாம் மாச்சாரியங்களைக் கொண்டவர்கள். சின்னா பின்னாப்படுத்தப்படுகின்றன. மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள். வன்முறை வெறியாட்டங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அரசியல் அமைப்புச் சட்டங்களின் பெயரால் உறுதிமொழி எடுத்தவர்கள். அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்கள். தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு விருப்பமற்றவர்களாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், நமது அரசியல் சாசனம் உருவாக்கிய அமைப்புகள், இந்தியாவின் குடியரசு தலைவர், உச்ச நீதி மன்றம் - பொதுவாக நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை தங்கள் கடமையை தயங்காமல் நிறைவேற்றிட வேண்டும். அதேபோல் ஊடகங்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிட வேண்டும். பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் இந்தக் கோரமான சூழலுக்கு எதிராக, தாங்கள் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்புகளை உணர்ந்து நடந்திட வேண்டும். அதிகாரத்திற்கெதிராக பேசுவது என்பதுதான் நமது சுதந்திரத்தையும், தனித்தன்மைகளையும் நிலை நிறுத்திட வேண்டும். இவண், 1. திரு. என், ராம் 2. மிரினால் பாண்டே 3. R.இராஜகோபால் 4. வினோத்ஜோஷ் 5. விஜய் ஷங்கர் 6. Q.W. நக்வி 7. அஷ்தோஷ் 8. சித்தார்த் வரதராஜன் 9. வசித்தார்த் பாசியா 10. எம்.கே.வேணு 11. அஜீஸ் தன்கார்வி 12. இரவீந்திர அம்பேத்கர் 13. ஆர்.கே. இராதாகிருஷ்ண ன் 14. தீபா திரிவேதி 15. ஹஸன் /கமல் 16. டீஸ்டா செட்டல்வாட் 17. ஜாவித் 18. பிரதீப் பஞ்சோபான் 19. அனுராதா பாஷின் 20. கல்பனா ஷர்மா 21. அனின்டோ சக்ரவர்த்தி 22. சபா நக்வி 23. தானியா இராஜேந்திரன் 24. ஷாபிர் அஹ்மத் - சீனியர் செய்தியாளர், 25. அனிர்பான்ராய் 26. தீரன் A சடோக்பான் 27. டோன்கம் ரினா 28. மேனேலிசா சாங்கிஜா அன்பார்ந்த வாசர்களே! இதுபோன்று சிந்திப்பவர்கள் - பாசிசத்தை எதிர்ப்பவர்கள் உலகெங்குமிருக்கின்றார்கள். இவர்களின் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிகளைத் தரும் என்பதை கணக்குப் பார்ப்பது அழகல்ல. ஆனால் சமகால இந்தியாவில் அதாவது இந்தியாவின் இருண்ட காலத்தில் அநியாயக்காரர்கள் இந்தியாவை அதலபாதளத்தில் தள்ளிக் கொண்டிருந்தபோது, அரசியல் நிர்ணயச் சட்டம் உருவாக்கிய அனைத்து அமைப்புகளும் துணைபோயின. அநியாயக்காரர்களுக்கு என்பதன் அப்பட்டமான சாட்சியம். மேலே உள்ளக கோரிக்கை. 1). உச்ச நீதிமன்றம் & இதர நீதிமன்றங்கள், பொதுவாக நீதித்துறை 2). தேர்தல் ஆணையம் 3). ஊடகங்கள் 4). அதிகார வர்க்கம் இதனை இன்னொரு கோணத்திலும் பார்த்தால் இந்தியா அதலபாதாளத்தில் வீழ்ந்தபோது அதனைக் காப்பாற்றிட முனைந்தோரின் பட்டியலில், முஸ்லிம்களோடு, மேலே நாம் அட்டவணை இட்ட அனைவரும் அவசியம் இடம் பெறுவார்கள். இனி நாளைய வரலாற்றில் இந்தியாவின் இந்த அழிவுகாலம் பற்றி பல்வேறு வரலாறுகளை எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு எழுதுவார்கள். அப்போது முஸ்லிம்களும் புட்டுப் புட்டு வைப்பார்கள். முஸ்லிம்களின் கூற்றை சிலர் புறம்தள்ள அல்லது மிகைப்படுத்தப்பட்டவை என பழிசொல்ல தலைப்படுவார்கள். அப்போது இவையெல்லாம் அப்பட்டமான சாட்சியங்களாக நிச்சயமாக அமையும். பாசிசம் வீழும்!! வீழ்ந்தே தீரும்!! இன்ஷா அல்லாஹ். அதுவரை நமது எழுத்து பெரும்போர் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |