Posted by S Peer Mohamed
(peer) on 10/3/2022 3:27:58 PM
|
|||
விளையாட்டுயென்றால் ஏர்வாடியை சுற்றி உள்ள பகுதியில் ஏர்வாடிக்கு என்று தனி பெயர் உண்டு. அது ஏர்வாடியை சுற்றி உள்ள பகுதிக்கு மட்டும் அல்ல... துபாயை சுற்றி உள்ள பகுதிக்கும் பொருந்தும் என்றும் காட்டியுள்ளனர் Eruvadi Eagles அணியினர்!! முதலில் DFCC tournamentல் விளையாடுவோமா வேண்டாமா என்ற சிறிய சலசலப்பு... போராளி களத்தை தேர்வு செய்வதில்லை களம் தான் போராளியை தேர்வுசெய்கிறது அடுத்து வந்த அனைத்து போட்டியிலும் எதிர் அணியினரை பந்தாடினர் Eruvadi அணியினர் ....... தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு களமும் அதுதான்... வீரனுக்கு வெல்வது மட்டுமே அழகல்ல கிடைத்த தோல்வியை அறத்தோடு ஏற்று கொள்வதும் மிக சிறந்த வீரம்!!! தோல்வியை அறத்தோடு ஏற்று கொண்டு முன்னேறி நகர்ந்தனர். இவர்கள் சும்மாவே இந்த ஆட்டம் ஆடுவார்கள் இவர்கள் கால்களில் சலங்கையை கட்டி விட்டால் கேட்கவா வேண்டும். ஆம் இவர்கள் காலில் சலங்கை கட்டியது போல் வந்து சேர்ந்தான் Abudhabi ரிஸ்வான் 5 Red bull குடித்த எனர்ஜி Eruvadi Eagles அணியினருக்கு.... அரை இறுதியில் பலம் பொருத்திய தஞ்சை Fighters அணியை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள் அனைவரும் உறுதியாகவே இருந்தார்கள் அவர்களை வென்று விடுவோம் என்று..... பிற அணிகளை எல்லாம் கலங்கடித்த தஞ்சை fighters அணியின் Super Star Batsman தன்வீரின் விக்கெட்டை நான்தான் எடுப்பேன் என்ற பேச்சு வேறு. சிலருக்கு இந்த பேச்சுக்கள் ஆணவமாக கூட தெரியலாம் என்னை கேட்டால் ஓர் விளையாட்டு வீரன் அவன் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடு ஞானசெருக்கு என்பேன். அவர்கள் சொல்லியது போல் செய்தும் காட்டி தஞ்சை அணியினரை சரணடைய வைத்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்கள் ....... 27 முறை நடந்த DFCC Tournamentல் பங்கு பெற்ற அணி முதல் போட்டியிலே இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற வரலாறு இல்லை..... வரலாற்றை பலர் படிப்பார்கள், பலர் எழுதுவார்கள், சிலர் இடம் பெறுவார்கள் ஆனால் ஒரு சிலரால் மட்டுமே வரலாறு மாறும்..... இறுதியில் தோல்வி Eruvadi அணியினர் இறுதி போட்டியில் வெல்ல முடியா விட்டாலும் அந்த கோட்டையில் ஒரு கொடி நாட்டப்பட்டது அது ஏர்வையின் கொடி ERUVADI ஈகிள்ஸ்🔥🔥 எனும் பலம் வாய்ந்த கப்பலை ஜைனுல், அக்ரம் மற்றும் அசன் மூவரும் சிறந்த மாலுமிகளாக செயல்பட்டு சரியான இடத்தில் கரை சேர்த்து அங்கு பிற அணிகள் நாட்டி இருந்த கொடிகளை எல்லாம் அகற்றிவிட்டு சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல் ஒற்றை ஏர்வாடியாக களம் புகுந்து வெற்றி கொடி நாட்டிய |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |