Posted by S Peer Mohamed
(peer) on 12/12/2022 4:01:53 PM
|
|||
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் மொராக்கோ வீரர்கள் உலகுக்கே ஒரு பெரும் பாடத்தைக் கற்றுத்தருகிறார்கள். போட்டியில் வெற்றி பெறும்போதெல்லாம் தங்கள் பெற்றோரைக் கட்டியணைத்து முத்தமிட்டு, ஒவ்வொரு போட்டியின்போதும் குழுவாகச் சேர்ந்து பிரார்த்தனை செய்து, குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அதேவேளை ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களோ... வெற்றியின்போது பெண் தோழிகளையும் யாரென்றே தெரியாத அழகிகளையும் முத்தமிட்டு முகம் சுழிக்க வைக்கின்றனர். ஐரோப்பியர்களிடம் நெருக்கமான குடும்பப் பிணைப்புகள் அவ்வளாக பார்க்க முடிவதில்லை. குடும்பம் என்ற கருத்து அங்கே மறைந்து வருகிறது. பெற்றோர் முதியோர் இல்லங்களில் விடப்படுகிறார்கள். அனைத்துவிதமான அநாகரிகங்களையும் எவ்வித கூச்சமும் இன்றி செயல்படுத்துகிறார்கள். அதேவேளை மோராக்கோவின் வெற்றிகளில் குடும்பத்தின் தார்மீக ஆதரவு பெரும் பங்காற்றுகிறது. ஐரோப்பியர்கள்தான் மோராக்கோ நாட்டினருக்கு கால்பந்தாட்டத்தைக் கற்றுக்கொடுத்தார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இப்போது அவர்களோ ஐரோப்பியர்களுக்கு நாகரிக நெறிமுறைகளையும் குடும்பத்தின் மதிப்பையும் கற்றுத்தருகிறார்கள். பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அன்னையின் நெற்றியை முத்தமிடுவதைவிட வேறென்ன பரிசை அந்தத் தாய்க்கு நாம் கொடுத்துவிட முடியும்?! தன் மகன் மைதானத்தில் இருந்து நேராக தன்னிடம் வந்து தன்னை அணைத்து முத்தமிடும்போது அந்தத் தாயின் முகத்தில் தெரியும் பரவசத்தையும் ஆனந்தத்தையும் பாருங்கள். வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இஸ்லாம் ஒரு Family Oriented Religion என்று சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. குர்ஆனில் கூறப்படும் நபிமார்களின் வரலாறுகள் அனைத்தும் குடும்பத்துடன்தான் கூறப்பட்டிருக்கும். காரணம் இஸ்லாத்தில் குடும்ப உறவு அவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெறுகிறது என்பதால். விஞ்ஞானமும் பொருளாதாரமும் போதும் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று எண்ணி குடும்ப உறவை நசுக்கிக் குப்பையில் போட்ட மேற்குலகின் விளைவுகளை உலகம் இன்று கண்ணால் காண்கிறது. மேற்கத்திய வீரர்களும் ஒருநாள் தங்கள் தாய் தந்தையின் நெற்றியை முத்தமிடும் நாள் வரத்தான் போகிறது. ஆயினும் வெறும் பிரார்த்தனைகளால் மட்டும் அது சாத்தியப்படாது. உழைப்பும் தேவை. நூஹ் மஹ்ழரி |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |