Posted by S Peer Mohamed
(peer) on 2/15/2023 10:42:04 AM
|
|||
சமீபத்தில் துருக்கியிலும் சிரியாவிலும் நடந்த கோர பூகம்பங்கள் உலகில் வாழும் அத்தனை மனித உள்ளங்களையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி விட்டன அந்த மக்கள் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நிற்கின்றனர் எண்ணிலடங்கா மக்கள் தங்கள் உறவுகளை பந்தங்களை சொந்தங்களை பசியிலும் பட்டினியிலும் கடும் குளிரிலும் ஒதுங்குவதற்கு கூட ஒரு இடமின்றி நடுவெளியில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் மனிதநேயமிக்க சகோதரர்களே ! சகோதரிகளே ! அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர நாம் நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய முன் வர வேண்டும் வீ பார் ஆல் என்ற தன்னலமற்ற அறக்கட்டளை சேவை மனப்பான்மை கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ளது அந்த அறக்கட்டளை துருக்கி தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தொடர்பில் உள்ளது தூதரகமும் உடனடியாக அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களின் பட்டியலை அனுப்பியுள்ளனர் அவற்றில் ஒரு சில பொருள்களை வாங்கி அனுப்புவதற்கு வீ பார் ஆல் அவர்களோடு ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தி உள்ளது இந்த முயற்சியில் தாங்கள் அனைவரும் பங்கு ஏற்று அதற்கான பொருளாதார உதவியை மிகத் தாராளமாக வழங்குங்கள் துன்பத்திலும் துயரத்திலும் துக்கத்திலும் அல்லல்படும் நம் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் ஆன அத்தனை உதவிகளையும் செய்வோம் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நாம் செய்த நன்மையின் கூலியை இம்மையிலும் மறுமையிலும் பலபடங்கு அதிகமாக தந்து அருள் புரிந்து கிருபை செய்வானாக ! வங்கி விபரம் உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |