துபையில் ரமளான் - 2023

Posted by S Peer Mohamed (peer) on 3/26/2023 4:27:26 PM

துபாய் என்றாலே பலருக்கும் மேற்கத்திய கலாச்சாரம், கூத்து , கும்மாளம் என்பது மட்டும் தான் நினைவுக்கு வரும் . ஆனால் துபாயின் இன்னொரு பக்கம் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சிகள் , அரபு கலாச்சாரத்தை பாதுகாத்தல் , இஸ்லாமிய அடிப்படையிலான தான தர்ம செயல்பாடுகள் எனவும் அதிலும் active ஆக பல செயல்பாடுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது . அதிலும் ரமழான் வந்து விட்டால் , “நாங்க வேற லெவல் “ என்ற அளவுக்கு பக்தி பரவச நிலைக்கு மொத்த நகரமே வந்து விடுவது போல இருக்கிறது .

மூன்று வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அபபுறம் வந்துள்ள இந்த ரம்ழானில் நகரம் முழுக்க பல்வேறு ரமழான் நிகழ்ச்சிகள் … சர்வதேச காரிகள் இமாம்களின் தராவீஹ் தொழுகைகள் … ஆங்காங்கே ரமழான் Night Markets … , தமிழ் , உருது , பெங்காலி , பிலிப்பினோ உள்ளிட்ட பல்வேறு மொழிகளினாலான பயான்கள் , வான வேடிக்கைகள் … , கடைகளில் Special offers என இநத ரமழான் வெகு சிறப்பாக ஆரம்பித்துள்ளது . அல்ஹம்துலில்லாஹ் .

தலைசிறந்த காரிகள் தொழ வைக்கும் ரமழான் சிறப்பு தராவீஹ் தொழுகைகள் , இவ்வருடம்
30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பள்ளிகளில் …
50 க்கும் மேற்பட்ட உள்ளூர் காரிகள் ..
*30 க்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற காரிகள் *( ஷேஹ் மிஷாரி அல் அஃபாஸி , ஷேஹ் ராத் அல் குர்தி , மக்கா இமாம் ஷேஹ் அப்துல் அஜீஸ் பந்தர் பலீலா… போன்றோர் )
தலைமையில் நடக்கிறது .

World Expo நடந்த Expo city யில் சர்வதேச காரிகளின் தொழுகையும் , சர்வதேச மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவும் நடக்கிறது . Expo City யே இஸ்லாமிய மயமாகி , எங்கும் தலஅல் பத்ரு .. போன்ற இஸ்லாமிய கீதங்களின் இசை தான் கேட்கிறது . அதன் மையப்பகுதியான central Al Wasl dome ல் ரமழான் மற்றும் இஸ்லாம் பற்றிய ஒளி ஒலி லேசர் காட்சிகளும் ஆங்கில நாடகங்களும் நடைபெறுகின்றன . அந்த நாடகத்தின் வாயிலாக அங்கு பெரும்பான்மையாக வரும் மேற்கத்தியர்களுக்கு ரமழான் பற்றியும் இஸ்லாம் போதிக்கும் சாந்தி , சமத்துவம் , பிறருக்கு உதவுதல் போன்ற இஸ்லாத்தின் விழுமியங்கள் பற்றியும் எடுத்து சொல்லும் விஷயம் உண்மையிலேயே மிக அற்புதமாக இருந்தது .

இன்னொரு பக்கம் துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அவர்களின் வருடாந்திர ரமழான் charitable initiative ஆக உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களுக்கு 1 Billion Meals ( 100 கோடி உணவுகள் ) வழங்கும் மகத்தான அறப்பணி நடைபெற்று கொண்டிருக்கிறது . ஆண்டு தோறும் நடைபெறும் துபாய் சர்வதேச குர்ஆன் விருது நிகழ்ச்சியும் தொடர்ந்து 26 வது வருடமாக இவ்வருடம் நடைபெறுகிறது . இதில் உலகம் முழுவதிலும் இருந்து 60 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளம் ஹாஃபிழ்கள் கலந்து கொள்கிறார்கள் . முதல் பரிசாக 250,000 திர்ஹம் ( ரூ . 50 இலட்சம் ) வழங்கி துபாய் அரசு கவுரவிக்கிறது .

இன்னும் பல ரமழான் சிறப்பு நிகழச்சிகள் மற்றும் அறப்பணிகள் ….
இவற்றின் மூலம் இதிலும் துபாய் நம்பர் 1 என்பதை நிரூபித்துள்ளார்கள் . என்ன தான் கேளிக்கைகளிலும் ஆடம்பரத்திலும் மூழ்கி கிடந்தாலும் இம்மாதிரி நல்லறங்கள் மூலம் தான் அல்லாஹ் இவர்களுக்கு பரக்கத் புரிந்துள்ளான் என எண்ணத் தோன்றுகிறது.

இது போன்ற நல்லறங்களில் அல்லாஹ் நம்மையும் ஒண்றினைப்பானாக . இந்த ரமழானின் பொருட்டால் அனைவரின் பாவங்களையும் மன்னித்து கிருபை செய்வானாக . இந்த அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மன்னிப்பையும் கிருபையயும் பொழிந்து , அவர்கள் நேர்வழியில் நல்லாட்சி நடத்த அருள் புரிவானாக . நமது நாட்டிலும் இது போன்ற நல்ல ஆட்சியாளர்களை தந்து , அநியாயக்காரர்களிடமிருந்தும் நம்மை பாதுகாப்பானாக . ஆமீன்









Other News
1. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
2. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
3. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
4. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
5. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
6. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
7. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
8. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
9. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
10. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
11. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
12. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
13. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
14. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
15. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
16. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
17. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
18. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
19. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
20. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
21. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
23. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
24. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
25. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
26. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
28. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
29. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
30. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..