Posted by S Peer Mohamed
(peer) on 5/20/2023 5:47:18 AM
|
|||
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள 89 சதவீத 2000 ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 2017ல் வெளியிடப்பபட்டன. மார்ச் 2018ன் படி 6.73 லட்சம் கோடி ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அதாவது 37.3 சதவீதம் என்கிற அளவில் புழக்கம் இருந்தன. ஆனால் 2023 மார்ச் 31ன் படி 3.62 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் 2000 ஆயிரம் அளவிற்கு கொடுத்து 500 ரூபாய் அல்லது 200 அல்லது 100 ரூபாய் என எக்ஸேஎன்ஞ்ச் செய்து கொள்ளலாம் என்றும், வரும் மே 23ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளிலும் இது நடைமுறைக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |