Posted by S Peer Mohamed
(peer) on 7/25/2023 8:21:51 AM
|
|||
மணிப்பூர் மாநிலத்தில் 85% மலைகளும் காடுகளும்.15% சமவெளிப்பகுதிகளும் கொண்டது. மெய்தி மக்கள் மலைகளில் நிலம் வாங்க முடியாது. இங்குதான் பாஜகவின் கோர முகம் உள்ளே நுழைகிறது.மேய்தி மக்களை பழங்குடிகளாக அறிவிக்க மாநில பாஜக அரசு மணிப்பூர் உயர்நீதி மன்றத்தில் தீர்ப்புவாங்குகிறது. இந்த செய்தி பரவியதும் ஒரு ஊர்வலம் நடக்கையில் கலவரம் தூண்டி விடப்படுகிறது. பிறகு இன்றுவரை நெருப்பு அணையவில்லை.மனித உயிர்உடைமைகள் கட்டிடங்கள் சர்ச்கள் கோயில்கள் வீடுகள் வணிக வளாகங்கள்என எல்லாம் எரிந்து சாம்பலாகின்றன.பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் ஆண்கள் கொல்லப்படுகின்றனர்.பாலியல் வன்முறை நிர்வாண ஊர்வலம் எல்லாம் தொடர்கதையாகிப் போனது. கனிமத்துக்கும் கலவரத்திற்கும் என்ன சம்பந்தம்.? பல்லாயிரம் ஆண்டுகள் தங்கள் வாழிடமாக,தாய் மண்ணாக இருந்த நிலங்கள் பறிக்கப்படும் சூழலுக்கு வந்ததும் இயல்பாக பயமும் பதட்டமும் ஏற்பட்டு குக்கி நாகா மக்கள் போராடுகின்றனர். இரத்தினவேலு வசந்தா... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |