Posted by S Peer Mohamed
(peer) on 7/25/2023 8:59:31 AM
|
|||
மணிப்பூரில்..நிர்வாணமாக பழங்குடி பெண்களை இழுத்துசென்று பலாத்காரம்! தடுக்க முயன்ற சகோதரர் கொலை....! இன்னும் மக்கள் சிந்திக்கவில்லை எனில் தேசம் முழுவதும் பரவும் இந்த மதி கெட்டவர்களின் அராஜகம்... வேடிக்கை பார்க்கும் மானம் கெட்ட இரட்டை என்ஜின் ஆட்சி... சிந்தியுங்கள்.. இவள் நம் வீட்டு மகளாக, சகோதரியுமாய் இருந்தால்?? பீ..ஜேபியின் ஆட்சி எங்கு அமைக்கிறதோ அங்கு மனிதர்களின் மனநிலை விலங்குகளை விட கேவலமாக இருக்கிறது.. இருண்ட காலத்தை நோக்கி.. இந்தியா சாதி மத துவேசத்தை விதைக்கிறது இந்த இரட்டை எஞ்சின்..! கொஞ்சம் உடைத்தே பேசுகிறேன்... மகத்தான மனிதர் மன்மோகன்சிங் ஆட்சி காலகட்டத்தில் அக்லக் எனும் முதியவர் கறி வைத்திருந்த ஒரே பாவத்திற்காக சொந்த ஊர் மக்களால் அடித்தே கொல்லப்பட்டார். ரோஹித் வெமுலாவும், அனிதாவும், ஃபாத்திமாவும் அவர்கள் ஆசைப்பட்ட கல்வியாலேயே தற்கொலைக்குத் தள்ளப் பட்டனர். 2ஜி யில் உண்மையிலேயே கொள்ளை போயிருந்தால் கூட நம் பிள்ளைகளை நாம் இழந்திருக்க மாட்டோம்! வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கொரோனாவில் உள்ளூர் மக்களே அகதியைவிட அசிங்கமாய் நடத்தப்பட்டனர் - கேட்டால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கிற பணத்தை எடுத்து ஆளுக்கு பதினைந்து லட்சம் தருகிறேன் என்று படம் ஓட்டினார்கள். இதோ மணிப்பூர் மாநிலமே காட்டுத்தீயைவிட மோசமாக எரிகிறது. இன்று ஒரு பெண்ணை பட்டப் பகலில் ஊராக சேர்ந்து கேமராவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டே அடிக்கிறார்கள் - நிர்பயா உயிரோடு இருந்திருந்தால் நம் முகத்தில் துப்பியிருப்பாள்! இன்னும் எவ்வளவை எழுத!?!🤦♀️ அன்று காங்கிரஸ், திமுக விற்கு எதிராக ஊழல், கருப்பு பணம் ஒழித்து.. ஒவ்வொருவர் கணக்கில் 15 லட்சம் என.. பொய்யான பிரச்சாரம் செய்து மக்களை ஏற்றிவிட்டு ஏமாற்றியவர்கள்..! இன்றும்.. திமுக ஒரு ஊழல் கட்சி என மீண்டும் மீண்டும் கட்டமைத்து இந்த "ராம ராஜ்யம்" தொடர..வேலை செய்துவருகிறார்கள். பாஜக வைப் போன்ற அயோக்கியத்தனமான ஒரு கட்சி இந்த உலகத்திலேயே இல்லை. நடக்கப் போகிற கொடுமைகளை தடுப்பதற்காகவாவது பாஜக வை தோற்கடிக்க நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைப்போம்! நம் சந்ததிகளுக்காக..! ஒரே ஒரு அறிவுரைதான். இந்த நேரத்தில்.. திமுக காங்கிரஸை குறை கூறிக் கொண்டு வருபவனை மட்டும் 10அடி முன்பே நிறுத்தி விடுங்கள்! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |