Posted by S Peer Mohamed
(peer) on 7/25/2023 9:51:34 AM
|
|||
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி மாடல் பள்ளியில் உலக செஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 23-ஜுலை-2023, இளம் கிரான்ட் மாஸ்டர்களை உருவாக்கும் விதமாகவும், குழந்தைகளின் தனித் திறமையை வளர்க்கும் விதமாகவும், மாவட்ட செஸ் அகாடமியின் பொருளாளர்: திரு.மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலோடு நெம்ஸ் பள்ளி வளாகத்தில் இந்த போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக இதற்கான முன் பதிவுகள் ஜுன் மாதம் முதல் பெறப்பட்டது. மாணவ மாணவிகளுக்கான குழுக்கள் FIDE (உலக செஸ் அகாடமி) விதிமுறைகள் படி பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலாவதாக காலை 10.15 மணிக்கு: மாணவி பஸ்னா கிராத் ஒதினார். ஆசிரியை: ஜனோபர் அவர்கள் செஸ் போட்டி குறித்த அறிமுக உரையாற்றினார்கள். மாணவி பஸ்னா வரவேற்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் விதமாக நெம்ஸ்-NEMS பள்ளியின் அறங்காவலர் ஜனாப்: ஹனீப் அவர்கள் பொன்னாடை போர்த்தினார்கள். உலக செஸ் போட்டியின் விதிமுறைகள் குறித்து இப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த மஜித் அறக்கட்டளையின் தலைவர் ஜனாப்: ரிஸ்வான், போட்டிகளை நெல்லை ஏர்வாடி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் அறங்காவலர் ஜனாப்: ஹனீப், அவர்களுடன் இனணந்து ஒவ்வொரு சுற்று போட்டியிலும் வென்றவர்களுக்கான விபரங்கள் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் ( International chess Federation) அங்கீகரிக்கப்பட்ட வலைதளங்கள் மூலம் வெளியிடப்பட்டது. நான்கு குழுக்களுக்கு, முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கான பரிசுகளை மாவட்ட செஸ் அகாடமியின் பொருளாளர் மற்றும் இண்டெர்னேஷனல் ஆர்பிட்டருமான திரு: மணிகண்டன், இந்த நிகழ்ச்சியில், மேலும் மற்ற பள்ளிகளின் மாணவர்களோடு சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நெம்ஸ்-NEMS பள்ளியின் மாணவர் தல்ஹா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே சிறப்பாக நிறைவுற்றது. 4 குரூப்களில் வயது வாரியாக முதல் பரிசு பெற்ற மாணவ,மாணவிகளின் விபரங்கள்: முதல் பரிசு: 1 வது வகுப்பு முதல் 3 வகுப்பு வரை முதல் பரிசு: முதல் பரிசு 10 வயது முதல் பரிசு முதல் பரிசு: 13 வயது முதல் பரிசு: முதல் பரிசு 16 வயது முதல் பரிசு |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |