இவர் ரமழான் மஹ்மூத். வயது 9. 2014ல் காஸாவில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அவர் பிறந்தார். அன்றைய தினம் அவரது வீடு சியோனிச பயங்கரவாதிகளின் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டது. தந்தை பலத்த காயம் அடைந்தார். அவரது சித்தப்பா (தந்தையின் சகோதரர்) வீர மரணம் அடைந்தார். ஹாஃபிழும்(தூய திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்) ஹிஃப்ழ் ஆசிரியருமான சித்தப்பாவின் பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டது.
கடினமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ரமழான் அசாதாரணமான திறமைகளை வெளிப்படுத்தினார். தடைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரது திறமைகளை பெற்றோர் வளர்த்தெடுத்தனர். இரண்டரை வயதில் ரமழானின் 27ஆம் நாள் இரவு தனது முதல் சொற்பொழிவை சொந்த ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ரமழான் மஹ்மூத் நிகழ்த்தினார். அவர் நான்கு வயதில் எடுத்த ஒரு அற்புதமான வீடியோ உள்ளது.
ஷெய்க் ராதிப் அந்நாபுல்ஸியின் “லா தஃக்லக்.. அல்லாஹு மௌஜூத்” (கவலைப்படாதே, அல்லாஹ் இருக்கிறான்) என்ற தலைப்பிலான உரையை தனக்கே உரிய பாணியில் நிகழ்த்தினார். பின்னர், அவர் நிறைய அறிவுறுத்தல் மாதிரி உரை கிளிப்புகளை உருவாக்கினார். அதற்கு தேவையான அறிவும் அவருக்கு உண்டு. குர்ஆனில் உள்ள பத்து ஜூஸ்களை மனப்பாடம் செய்துள்ளார். இமாம் நவவியின் நாற்பது ஹதீஸ்கள். வரலாறு, கதைகள், கவிதைத் தொகுப்புகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்துள்ளார். நபிமார்களின் வரலாறு மற்றும் பண்புகளை விவரிக்கும் புத்தகங்களுடன் அவரது கல்வி தொடங்கியது.சிறு வயதில் இருந்தே தூய திருக்குர்ஆனை கேட்டுக் கொண்டே தூங்குவது அவரது வழக்கமாகிவிட்டது. அன்றாடம் அவரது குடும்பத்தினர் குர்ஆனை படிப்பார்கள். விவாதிப்பார்கள்.
இதையெல்லாம் ஏன் இங்கு கூற வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சில தினங்களுக்கு முன்பு ரமழான் மஹ்மூத் ஒரு விருதை பெற்றுக் கொள்ள குவைத் நாட்டிற்கு செல்வதாக இருந்தது. குவைத்தில் இயங்கும் தஃவா (இஸ்லாமிய அழைப்பியல்) மையம் ஒன்று அவருக்கு ஸுஃபராவுல் ஹுப்பு (அன்பின் தூதர்கள்) என்ற விருதை வழங்க முடிவுச் செய்திருந்தது. போர் காரணமாக பயணம் தடைப்பட்டதால் சியோனிச பயங்கரவாதிகளின் குண்டுவீச்சில் சிதறடிக்கப்பட்ட அவரது வீட்டின் சிதிலங்களின் முன்னால் நின்று கொண்டு அவர் ஆற்றிய உரையின் வீடியோ பதிவை விருது வழங்கும் நிகழ்ச்சியில் அந்த தஃவா அமைப்பு திரையிட்டது. (வீடியோ பதிவு கமென்டில் உள்ளது). கட்டாயம் பாருங்கள். இதுவரை அவரை குறித்து கூறிய அறிமுக தகவல்கள் அந்த வீடியோவில் அவர் கூறியதுதான். பொருள் தெரியாதவர்களுக்காக அந்த வீடியோ பதிவில் உள்ள உரையின் சுருக்கமான மொழியாக்கம் கீழே 👇👇👇👇👇👇👇
நமது ஹபீப்(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய மண்ணில் இருந்து நான் பேசுகிறேன். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,"உங்களுக்கு மிகவும் சிறந்த போர்க்களம் அஸ்கலான்"(வரலாற்று ரீதியாக காஸாவின் ஒரு பகுதிதான் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அஸ்கலான். சியோனிஸ்டுகள் அஷ்கலான் என்று அழைக்கின்றனர்). அந்த அபிமானத்திற்குரிய காஸாவில் இருந்து நான் பேசுகிறேன்! சியோனிச வாரிசுகளின் தலைகளை தரையில் அமிழ்த்திய ஜீரோ பாயிண்டில் நேருக்கு நேராக நின்று சியோனிஸ்டுகளை கொன்ற போராளிகளின் காஸா. இடையுறாமல் இரத்தம் சிந்தும் போதும் ஓயாமல் எதிர்த்து போராடும் காஸா. இந்த தீனின் பாதையில் சிறப்புக்குரிய மனிதர்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காஸா. ஆயிரக்கணக்கான உயிர் துறந்த தியாகிகளையும், பல்லாயிரக் கணக்கான வாழும் தியாகிகளையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காஸா. இந்த பாதையில் பல தசாப்தங்களாக சந்திக்கும் எண்ணிலடங்கா துயரங்களை பொருட்படுத்தாமல் உறுதியான போராளிகளை தயார்படுத்தும் காஸா.
2014 ஆம் ஆண்டு போரின் போது எனது வீட்டிற்கு வெளியே உள்ள அகதிகள் முகாமில் தான் நான் பிறந்தேன். உயிர் தியாகிகளும், காயமுற்றவர்களுகும் ஆங்காங்கே கிடக்கும் நிலையில் தான் இந்த மண்ணில் நான் பிறந்தேன். அல்லாஹ் நன்மையை(ஃகைர்) தீர்மானித்திருப்பது நாம் மிகவும் சிரமமாக கருதும் இத்தகைய கட்டங்களில் அல்லவா! நான் அறிவு மற்றும் தஃவா( இஸ்லாமிய அழைப்பியலின்) பாதையில் இருக்கிறேன். அல்லாஹ்வின் பாதைக்கு அழைப்பதன் மூலமும், குத்ஸ் விவகாரத்தில் கவனத்தை ஈர்ப்பதன் மூலமும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். நான் இந்த உம்மத்திற்கு(சமூகத்திற்கு) பயனளிப்பவனாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
என்னிடமும் முழு முஸ்லிம் இளைஞர்களிடமும் சில விசயங்களை விழிப்புணர்வூட்ட விரும்புகிறேன். அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.. அல்லாஹ்வின் தூதரின் வழியைப் பின்பற்றுங்கள்.ஃபலஸ்தீனத்தின் மீது உங்கள் கண்களை பதித்திருங்கள். ஃபலஸ்தீனத்தின் வரலாற்றை நாம் கற்க வேண்டும், கற்பிக்க வேண்டும். ஃபலஸ்தீனம் என்பது உலக முஸ்லிம் உம்மத்தின் பிரச்சனை, நமது முதல் கிப்லாவின் பிரச்சனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புனித பூமியின் சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் பாராமல் தயாராகும் சிங்கக் குட்டிகளின் தேசம் காஸா என்பதை கற்பிக்க வேண்டும்.
போராட்டத்தில் நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி நிச்சயமான நாட்கள் வரவிருக்கின்றன. இந்த மாபெரும் வெற்றியில் உங்கள் சொந்த அடையாளங்களையும் பதிவு செய்யுங்கள். “அது எப்போது நிகழும் என்று உங்களிடம் கேட்டால் அது உடனே நிகழும் என்று சொல்லுங்கள்."
உங்களிடமிருந்து இந்த விருதினை நேரடியாக வாங்க முடியவில்லை. ஆனால் குத்ஸின் வாயிலில் வைத்து உங்களிடமிருந்து இந்த விருதினை பெற விரும்புகிறேன். நான் வெற்றியின் ஃபத்ஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு அந்த விருதை உங்களிடமிருந்து பெறும் நாளுக்காக காத்திருக்கிருப்பேன்.. பைத்துல் மக்திஸ் வாயிலில் டாக்டர் முஹம்மது அல்-இவதி (குவைத்தில் உள்ள ஒரு பிரபலமான தாயீ(இஸ்லாமிய அழைப்பாளர்)) அவர்களிடமிருந்து இந்த விருதை பெற வேண்டும். நாம் அனைவரும் அங்கு சந்திக்க வேண்டும். இது அல்லாஹ்வுக்கு மிக மிக எளிதான காரியம் அல்லவா!
நீங்கள் காண்பதைப் போலவே நான் இடிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து தான் இந்த காணொளியை பதிவு செய்கிறேன். பாருங்கள்! இது தான் நாங்கள் காஸாவில் வாழும் தருணங்கள். இதுதான் சிறார்களுக்கான காஸாவில் உள்ள எங்களின் வாழ்க்கை! உலகில் மற்ற குழந்தைகள் வளரும் அழகான சூழ்நிலைகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. எப்போதும் குண்டுவீச்சு. எந்த நேரத்திலும் ஏதேனும் அன்பானவர்களின் மரணம். இடிந்து கிடக்கும் இந்த கட்டிடம் எனது வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ளது.
நான் இந்த காணொளியை பதிவு செய்து கொண்டிருக்கும் போது சியோனிஸ்டுகள் எங்கள் மீது ஒரு குண்டை வீசக்கூடும். அவ்வாறு அல்லாஹ் எங்களை ஷஹீதுகளாக(உயிர் தியாகிகளாக) தேர்ந்தெடுப்பான்.
நீங்கள் தொலைக்காட்சி திரையில் பார்ப்பதைப்போலவே ஆக்கிரமிப்பு எதிரிக்கு குழந்தைகள், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லை. எங்களை கொன்றொழிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன? என்று தெரியாதது மட்டுமல்ல. அவர்கள் பெரும்பாலும் குழந்தைகளான எங்களைத்தான் குறி வைக்கிறார்கள். ஏன் எங்கள் மீது இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொடூரத்தை இழைக்கிறார்கள்? ஆனால் காஸாவில் உள்ள மனிதர்களாகிய நாங்கள் இந்த கொடூரமான சூழல்களை வென்றெடுப்போம். இந்த செய்திகளை பகிர்ந்து கொண்டே இருப்போம். காஸாவில் தொடர்ச்சியாக குண்டுவீச்சு, தகர்ப்பு மற்றும் முற்றுகைக்கு உள்ளான எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!