Posted by S Peer Mohamed
(peer) on 11/30/2023 9:29:51 AM
|
|||
அக்டோபர் 7 ஆம் தேதி ஹாமாஸ் ஆய்தம்தாங்கிய குழுவினர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தபோது அங்கேயிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெரும்பாலும் பெண் ராணுவத்தினேரே அங்கே பணியில் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவர் ஒரு நேர்காணலில் அந்த சம்பவத்தின் போது குடியிருப்பு பகுதியை நோக்கி சுடுமாறு கட்டளை வந்தது. அப்போது அங்கே இஸ்ரேலிய பொதுமக்கள் இருக்கின்றனரா என்று கேட்டேன். அது எனக்குத் தெரியாது எலோரையும் சுட்டுத் தள்ளு என்ற பதில் வந்தது. முதலில் நான் தயங்கினேன், பின்னர் குடியிருப்பு பகுதியை நோக்கி என்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினேன்.
இதற்கு முன்னரும் அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த பெண் ஒருவர், இஸ்ரேல் ராணுவம் தான் இஸ்ரேல் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார் என்று கூறியதும் குறிப்பிடத் தக்கது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |