Posted by S Peer Mohamed
(peer) on 12/7/2023 7:49:08 AM
|
|||
நினைவூட்டல்களுக்கும் சக்தி உண்டு என்பதை பாபரி மஸ்ஜித் நினைவு தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பாபரி இடிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக அதை நினைவு கூர்வதற்கும், அதனை மீண்டும் அதே இடத்தில் கட்டவேண்டும் என்று முஸ்லிம்கள் உறுதியாக கூறுவதற்கும் காரணம் பாபரி விஷயத்தில் எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லாத நிலைப்பாடே காரணம். இங்கே நீதி ஒரு நாள் நிலைநாட்டப்பட்டே தீரும் என்று நம்புகிறார்கள் முஸ்லீம்கள். இறைவன் நாடினால் அது வெகு விரைவில் நிறைவேறும்..அன்றைய தினம் அயோத்தியில் எங்கே பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்ததோ, அதே வக்ஃப் நிலத்தில் பள்ளிவாசல் எழத்தான் செய்யும்.அன்று அங்கு பாங்கொலி உயரும்.எங்களின் வரும் தலைமுறையினராவது அங்கே தொழுகை நடத்துவார்கள்.அன்று அனைத்து சாலைகளும் அயோத்தியை நோக்கி செல்லும்.பாபரி மஸ்ஜித் இருந்த இடம் அது வக்ஃப் நிலமாகும்.அதனை யாருக்கும் தட்சிணையாக கொடுக்க முடியாது. பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டப்படும் வரை நமது முயற்சிகள் தொடரும்….தொடர வேண்டும். பாபரி மஸ்ஜிதுக்காக போராடும் முயற்சியை கைவிடுவதோ, பாபரியின் பெயரை கூட உச்சரிக்க தயங்குவதோ, பாபரியை இடித்த பயங்கரவாத இந்துத்துவ கும்பலுடன் சமரசம் செய்ய முயலுவதோ இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்து விடும். எப்படி அல் குத்ஸ் சியோனிச தாக்குதலுக்கு எதிரான எதிர்த்து நிற்றலின் அடையாளமாக திகழ்கிறதோ அதைப் போல் பாபரி மஸ்ஜித் சங்கி பாசிசத்திற்கு எதிரான எதிர்த்து நிற்றலின் அடையாளமாக திகழ வேண்டும். பாபரி ஒரு முஸ்லீம் அஜண்டா மட்டுமல்ல, அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் நீதியில் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான ஒரு அஜண்டாவாக மாற வேண்டும். சுதந்திரமும், நீதியும், பாதுகாப்புமெல்லாம் நம்மை தேடி வரும் இயற்கை வளங்களல்ல.மாறாக, பாசிசத்தையும், அநீதியையும், பயத்தையும் எதிர்த்து போராடி அடையவேண்டிய சமூக விழுமியங்கள் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்த புரட்சியும் நீதி மன்றங்களில் வென்றதில்லை. வீதிகளில் மக்கள் போராட்டங்களின் மூலம் தான் வென்றன. நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்பட்டாலும் மக்கள் மன்றம் இறைவனின் உதவியோடு அதை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையோடு தான் முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கும் மஸ்ஜிதுகளை பாதுகாப்பது மட்டுமல்ல இழந்த பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் எப்போது கட்டவேண்டும் என்பதையும் நாம் தீர்மானிப்போம் இன்ஷா அல்லாஹ். செய்யது அலி |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |