Posted by S Peer Mohamed
(peer) on 12/7/2023 7:51:55 AM
|
|||
இந்திய மண்ணில் இஸ்லாமிய வெறுப்பு எந்தளவிற்கு தழைத்தோங்கியுள்ளது என்றால் இடிக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கையான #பாபரி வழிபாட்டுத்தளம் என்னவோ ஒன்றுதான். ஆனால் இடிக்கப்படாமலேயே அடையாளம் மாற்றப்பட்ட உணர்வுகள்/உரிமைகள்/சின்னங்கள் ஏராளம் பாபரி ஆதாரங்களற்ற #நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே பறிபோனது. அந்த நம்பிக்கை என்ற கூற்று கூட இல்லாமல் சர்வாதிகார, இஸ்லாமிய வெறுப்புணர்வோடு மாற்றப்பட்ட விடயங்கள் பார்த்தோமேயானால் ஏராளமான நகரங்கள், ஊர்கள், இடங்கள், சுற்றுலா தலங்கள் என அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவற்றின் சிலவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டுவிட்டன அடுத்ததாக நிறைய இடங்களின் அடையாளங்கள் மாற்றப்பட தயாராக உள்ளன அவற்றுள் சில #அலகாபாத் - பிரக்யாராஜாக #ஃபெரோஜாபாத் - சந்திராநகராக #ஃபைசாபாத் - அயோத்யாவாக #முகல்ஸ்ராய் மற்றும் #ஜான்சி ரயில்நிலையங்கள் முறையே பண்டிட் தீனதயாள் உபாத்யா நகராகவும் வீரங்கன லஷ்மிபாயாகவும் மேலும் டசன் கணக்கான வார்டுகள், தெருக்கள், ரோடுகள் என அனைத்து இடங்களிலும் எங்கெல்லாம் இஸ்லாமிய அடையாளங்கள் உள்ளதோ அவை அத்துனையையும் அழித்தொழிப்பதே முழு நேர வேலையாக மேற்கொண்டுள்ளது இந்த #பாபரி நிலத்தை திருடிய யோகியின் அரசாங்கம் மேலும் தாஜ்மஹால் அமைந்துள்ள #ஆக்ராவின் பெயரை ஆக்ரவானாகவும் #சுல்தான்பூர் - குஷ்பவன்பூராகவும் #மைன்புரியை மாயன் நகரெனவும் #மிர்சாபூரை - விந்தியாதம் எனவும் #முசாபர் நகரை லஷ்மி நகராகவும் #அஜம்கரை அர்யன்கர் எனவும் இன்னும் கூறிக்கொண்டே செல்லலாம். இப்படி வெறிபிடித்த மிருகத்தை போல துளிகூட இஸ்லாமிய அடையாளமும், வரலாறும் இல்லாமல் முற்றுமாக ஒழித்து இந்தியாவை குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே சொந்தம் என காட்டிட துடிக்கும் இந்த பாசிச கயவர்களுக்கு புத்தியில் உரைக்கும்படி புரிய வைப்போம் நீ அடையாளங்களை அழித்துவிட்டு இறுதியில் ஆட்களை அழிக்கவந்தாலும் சரி இந்த மண்ணில் கடைசி இஸ்லாமியன் வாழும்வரை கூறிக்கொண்டே இருப்போம் நாங்களும் எங்கள் முன்னோர்களும் இம்மண்ணிற்கு சேர்த்த பெயர்களும், பெருமைகளும் ஏராளம்! இது எங்கள் தேசம்! அதை நாங்கள் தலைமுறை தலைமுறைக்கு வீதி முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டே இருப்போம்! இறைவன் நாடினால் ஒருநாள் இழந்த அத்துனையையும் குண்டூசி விடாமல் மீட்டெடுப்போம் #இன்ஷாஅல்லாஹ் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |