Posted by S Peer Mohamed
(peer) on 12/20/2023 6:44:55 PM
|
|||
ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் Barry Andrews இந்த இடத்தில் நடந்துக்கொண்டிருப்பது உலக மக்களை ஏமாற்றும் ஒரு வகையான கேலிக்கு கூத்து. 2 மில்லியனுக்கும் அதிகமான காஸா மக்கள் அங்கு உண்ண உணவின்றி குடிக்க நீர் இன்றி அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கு ரபா எல்லையில் அவர்களுக்காக உலக மக்கள் அனுப்பிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் நிவாரணப் பொருட்களை சுமந்து கொண்டு நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு டிரக் மாத்திரமே அனுமதிக்கப்படுகிறது. இவற்றை பெறுதவற்கான காஸா மக்களின் அடிப்படை மனித உரிமைகூட மதிக்கப்படாமல் மீறப்பட்டுக்கொண்டிருக்கிறது. பக்கத்து தேசத்து அரசுகளே கைவிட்ட நிலையில் பலஆயிரம் மைல்கள் தாண்டி நேரடியாக வந்து குரல் கொடுக்கும் இவர்களல்லவா உண்மையான மனிதர்கள்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |