அன்பு BBM Charitable and Educational Trust சகோதர,சகோதரிகளுக்கு , அஸ்ஸலாமு அலைக்கும்.
2023 டிசம்பர் கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கேம்லாபாத் மற்றும் வடக்கு ஆத்தூர் பகுதிகளுக்கு கடந்த 29-12-2023 அன்று நமது நிர்வாகக் குழு நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் வாழ்வாதார தேவைகளை கண்டறிந்து வந்தோம். அதன் தொடர்ச்சியாக 06-01-24 அன்று 15 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்களுடன் ( தோசை மாவு,இடியாப்ப மாவு தொழில் செய்து வந்தவர்களுக்கு மொத்தம் 7 கிரைண்டர்கள்,தையல் தொழில் செய்து வந்தவருக்கு தையல் மெஷின்,ஏர்கண்டிசன் தொழில் செய்தவர்களுக்கு அதற்கான உபகரணங்கள்,முற்றிலும் வீடு சேதமடைந்த 3 குடும்பங்களுக்கு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் 157495/- மதிப்பிலான பொருட்கள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல இறைவன் பாதிக்கப்பட்ட எல்லா மக்களின் துன்பங்களையும்,துயரங்களையும் நீக்கி அவர்களது பழைய வாழ்க்கை திரும்ப அருள்புரிவானாக!
தங்களது ஸக்காத் மற்றும் ஸதகாவை நமது BBM Trust க்கு தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும்..
BBM CHARITABLE AND EDUCATIONAL TRUST Baithussalam street,Mohideen Nagar. Eruvadi
|