போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்?

Posted by S Peer Mohamed (peer) on 4/4/2026 6:21:17 AM

இராணுவத்தவறும் அரசியல் தவறும் ஒன்றல்ல!!

போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்?

ஈரான் மீதான போர் அதன் மூர்க்கமான அசைவுகளுடன் எகிறி எழுகின்றது .நான்கு நாட்கள்தான் யுத்தம் என்ற டொலால்ட் ட்றம்பின் ஊகத்தைக்கடந்து வாரங்களாக நீடிக்கின்றது.போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்பதையே அதன் போக்குகள் காட்டி நிற்கின்றன.
போர் துவங்கி வெறும் முப்பது நாட்களில் உலகப்பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்ப சுமார் ஆயிரம் பில்லியன் எனவும் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்பு 36 பில்லியன் எனவும் மதிப்பீடுகள் காட்டுகின்றன.

அமெரிக்கா இஸ்ரேலுக்காக நடாத்தி வரும் ஈரானுக்கெதிரான யுத்தத்தில் நாளொன்றுக்கு சுமார் ஒரு பில்லியன் டொலரை இழக்கின்றது. ஆனால் எந்த இலக்கினையும் இதுவரை நெருங்கவுமில்லை. இப்போது தரைவழித்தாக்குதலுக்கான தயாரிப்புக்களில் அமெரிக்கா கவனம் குவிப்பதாக தெரிகிறது. ட்ரம்ப் போருக்கான காரணங்களாக அல்லது இலக்குகளாக முன்வைத்த மூன்றும் இதுவரை அடையப்பெறவில்லை.

 

 

01.ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக அழித்தல்

02.ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அழித்தல்

03.ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தல்

இவற்றில் எந்த இலக்கும் இதுவரை அடையப்பெறாதததால் போர் நீடிக்கும் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஈரான் மீதான போர் நீடிக்கக்கூடாது என்ற எதிர்ப்பலைகள் உலகம் முழுவதும் விரிவடைகின்றன. ஈரானில் ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்த அமெரிக்கா ஜனாதிபதி தனது நாட்டிலேயே இப்போது ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்தப் போரின் பொருளாதார விளைவுகளை முழு உலகமும் எதிர்கொள்ளத்துவங்கிவிட்டது. போர் துவங்கி மூன்றாவது நாளிலேயே அது ஆரம்பித்துவிட்டது. பெற்றோலியம், எரிவாயு, பெற்றோலியம்சார் உற்பத்திப்பொருட்களின் உலகத்தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப்பெருட்களின் சுமூகமான வினியோகத்திலுள்ள இடர்பாடுகள், பல நாடுகளில் விலைவாசி உயர்வு, உற்பத்தி ஆலைகளின் ஸ்தம்பிதம், போக்குவரத்து நெருக்கடிகள் என உலக சக்திவள நெருக்கடி பல்வேறு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்த்ததை விட ஈரான் போரில் மிகப்பலமாக நின்று பிடிப்பது தான் இங்கு ஊன்றிக்கவனிக்க வேண்டிய விடயம். ஈரானின் உளவுத்துறை மற்றும் போர் விமானக் கைத்தொழில் என்பன ஒப்பீட்டு ரீதியில் பலயீனமாகவுள்ளபோதும் அதன் ஏவுகணைத் தொழில்நுட்ப ஆற்றல் உலகையே வியப்பூட்டுகின்றது. போரில் யாருக்கு இதுகாறும் வெற்றி கிடைத்துள்ளது என்பதை விட எந்த நாட்டிற்கு பெரும் அழிவும் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது முக்கியமானது. ஈரானிலும் இந்தப்போர் பெரும் இழப்புக்களை உருவாக்கியுள்ளது உண்மை.

ஆயினும் இஸ்ரேல் அதன் ஏழு தசாப்த வரலாற்றில் என்றைக்கும் சந்தித்திராத அழிவுகளையும் நாசத்தையும் இந்தப்போரில் சந்தித்து வருகிறது என்பதும் மறுக்க முடியாத மாபெரும் உண்மையாகும். இந்தப்போருக்கு அயலில் உள்ள அறபு நாடுகள் வழங்கி வரும் விலையும் பாரியது. கடந்த நான்கு தசாப்தங்களாக தமது நாடுகளில் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் நடாத்தி வரும் தாக்குதல்களும் ஹுர்மூஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுப்பாடும் அறபு நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளகாக்கி இருக்கிறது.

மத்திய கிழக்கை முழுவதுமாக தம் வசம் ஆக்கிக் கொள்வதற்கான இறுதி யுத்தமே இது (The Last War to confront ,conquest and controls the entire Middle East) என அமெரிக்கா கருதுவதால் இந்தப்போரில் என்ன விலை கொடுத்தேனும் வெல்ல வேண்டும் எனவும் ஈரானில் அமெரிக்க -இஸ்ரேல் சார்பான ஓர் ஆட்சி மாற்றம் எப்படியும் நிகழ்ந்தே ஆக வேண்டும் எனவும் ஒரு அசாதாரண வெறியில் டொலால்ட் ட்ரம்ப் சில அருவருப்பான அரசியல் இராணுவ முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு தனது சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மறுபுறம் எதிர்வரும் ஆகஸ்ட் பாராளுமன்ற (நெஸ்ஸட்) தேர்தலில் மீளவும் வெற்றி பெற்று, ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவித்து மீளவும் இஸ்ரேலின் பிரதமராக தன்னைத் தகவமைத்துக் கொள்ளத்துடிக்கும் நெடன்யாஹூவுக்கும் இஸ்ரேலிலுள்ள ஸியோனிஸ யூதர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போர் பொய்களைச்செல்லி ஆரம்பிக்கப்பட்டது .போரின் தொடக்கத்திலேயே உண்மைகள் கொல்லப்பட்டன .போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்தத்தருணத்திலும் ட்ரம்பும் நெடன்யாஹூவும் மாறி மாறி பகுத்தறிவுக்கு அறவே ஒவ்வாத பொய்களையே தொடர்ந்தும் சொல்லி தமது மக்களை ஏமாற்றி வந்தனர். இன்னும் ஏமாற்ற விளைகின்றனர். ஆனால், உண்மை இப்போது மக்களுக்கு புலனாகி வருகின்றது. ஆதலால் அவர்களுக்கு போரை நீடித்துச்செல்லலாமா என்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.









Other News
1. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
2. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
3. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
4. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
5. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
6. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
7. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
8. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
9. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
10. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
11. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
12. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
13. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
14. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
15. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
16. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
17. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
18. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
19. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
20. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
21. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
22. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
23. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
24. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
25. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
26. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
27. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
28. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
29. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
30. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..