போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா?

Posted by S Peer Mohamed (peer) on 4/4/2026 6:24:24 AM

இந்தப் போர் நீடித்தால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்து உலக சக்திவள நெருக்கடி (world energy crisis ) அது உலகப்பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பது மட்டுமல்ல உலக நாடுகளில் உணவுப்பற்றாக்குறை பட்டினி பஞ்சம் என்பவற்றுக்கும் காரணமாக அமையும். தென்மேற்கு ஆசியா என்பது அறபுகளின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்திலும் செறிந்த செல்வாக்குள்ள ஒரு பிராந்தியம்.

இந்தியாவின் வெளிநாட்டுச்செலாவணியில் 38 விழுக்காடு வருமானம் வளைகுடா நாடுகளில் பணியாற்றிவரும் இந்திய தொழிலாளர்களின் வழியாகவே இந்தியாவுக்கு கிடைக்கின்றது. இலங்கையின் மொத்த வெளிநாட்டு வருமானத்தில் முதலிடம் வகிப்பது மத்திய கிழக்கில் பணியாற்யிவரும் 1.5 மில்லியன் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் ஊதியத்தால் கிடைக்கப்பெறுவது. வங்காளதேசம் பாகிஸ்தான் மாலைதீவு போன்ற நாடுகளினது அன்னியச்செலாவணியிலும் தென்மேற்கு ஆசியா புறக்கணிக்க முடியாத ஒரு பங்கினை ஆற்றி வருகிறது.

அறபு நாடுகள் தமது எண்ணெய் வளத்தை சர்வதேச சந்தையில் வினியோகம் செய்ய முடியாதபடி போர் நீடித்தால் இந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தமது வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதோடு தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் பாரியளவு சரிய ஆரம்பிக்கும். சுமுகமான எண்ணெய் வினியோகம் இத்தகைய நாடுகளில் அசாத்தியமாகும்போது உள்நாட்டு உற்பத்தித் துறை பாரிய பின்னடைவைச்சந்திக்கும். இவற்றின் திரட்சி பாரிய உள்நாட்டு பொருளாதார நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளும் என்பதில் ஐயமில்லை.

போர் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு நீடித்தால் இந்த விளைவுகள் நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது என்பதே உண்மை. போரை நாம்தான் முடித்து வைப்போம் என்ற ஈரானிய நிலைப்பாட்டுக்கு அப்பால் நெடன்யாஹுவுக்கும் ட்ரம்மபுக்கும் ஏற்பட்டுள்ள மானசீக அவமானமும் கௌரவப் பிரச்சினையும் ஈரான் மீதான இன்னும் பலமானதும் வலுவானதுமான ஒரு விடாப்பிடியான போருக்கான தயார்படுத்துலுக்கே அவர்களைத்தூண்டி வருகின்றது.கள நிலரங்கள் அதனையே காண்பிக்கின்றன.

உண்மையாகவே போருக்கான விலையைக்கணித்தால் ட்ரம்பும் நெடன்யாஹூவும் உடனடியாக போரில் இருந்து வெளியேறும் புள்ளியை (Exit Point) நாட வேண்டும். அதுவே கள உண்மை. ஏனெனில் இது இவ்விரு நாடுகளையும் பொறுத்த மட்டில் ஒரு சமச்சீரற்ற போர் (Assymetric war).போரின் பொருளாதாரமும் பாதிப்பும் சமச்சீரற்றவை .ஒரு பக்க வீக்கம் கொண்டது. ஈரானின் ஏவுகணை உற்பத்தி செலவு வெறும் 15000முதல் 20000 டொலர்கள்.

அத்தகைய ஏவுகணை ஒன்றை இடைமறிப்பதற்கு இஸ்ரேலிய வான் பாதுகாப்பு முறையினூடு அனுப்பப்படும் இடைமறிப்பு ஏவுகணை (Interceptive missile) ஒன்றின் உற்பத்திச்செலவு இரண்டு முதல் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள். இத்தகைய பிரமாண்டமான செலவுமிக்க எதிர்ப்பு ஏவுகணை ஐந்து வீதமே வெற்றிகரமாக செயல்படுகின்றது என்பது இஸ்ரேலைப்பொறுத்தவரை பெரிய துரதிஷ்டம். ஆக போர் நீடித்தால் இஸ்ரேலின் பொருளாதாரத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகும்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கிவரும் அதிநவீன ஆயுதங்கள் கூட இந்தப்போரில் எதிர்பார்த்த வெற்றியைத்தரவில்லை என்பது மற்றொரு துரதிஷ்டம் . அமெரிக்காவில் இப்போது ட்ரம்பின் அரசியல் முடிவுகளுக்கு மக்கள் எதிர்ப்புக்கிளம்பியுள்ளது. வருடாந்தம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வருகின்ற 14 பில்லியன் (Billion) இராணுவ மானியம் தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு கிடைக்குமா என்ற கேள்வியை இப்போது அமெரிக்கா எங்கும் வெகுண்டெழுந்த மக்கள் பேரணி எழுப்பி வருகின்றது.

காரணம் இதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வந்த ஆயுத மற்றும் நிதியாதரவு குறித்து அங்கு யாரும் கேள்வி கேட்கவில்லை.இப்போது பெருந்திரளான மக்கள் வீதிகளில் இறங்கி இந்தக்கேள்வியைக்கேட்க ஆரம்பித்துள்ளனர்.

நெடன்யாஹூவைப்பொறுத்தவரை இன்னொரு கசப்பான உண்மையையும் அவர் சமாளிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேலின் ஒவ்வொரு பிரஜையும் ஆகக்குறைந்தது இரண்டு ஆண்டுகள் கட்டாய இராணுவ சேவையில் இணைய வேண்டும் என்பது அவர்களது பிரஜா உரிமை சட்டத்தில் தெளிவாக குறிக்கப்பட்டுள்ள விடயம்.

இப்போது இஸ்ரேலியர்கள் அதனை எதிர்க்கின்றனர். இராணுவ சிப்பாய்களின் தொகை குறைந்து வருவதோடு இராணுவத்தில் இணையும் விருப்பார்வம் இஸ்ரேலிய இளைஞர்களிடையே வேகமாக குறைந்து வருகின்றது. இராணுவ சிப்பாய்களிடையே தற்கொலை வீதம் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலையில் போரை எப்படி நீடிப்பது.?

மிக ஆச்சரியமான உண்மை என்னவெனில் இத்தகைய சவால்களை தொடர்ந்தும் எதிர்கொள்ள முடியாத நிலையிலும் ட்ரம்பும் நெடன்யாஹூவும் தொடர்ந்தும் போர் செய்யும் முடிவிலேயே விடாப்பிடியாக உள்ளனர்.அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். ட்ரம்ப் எப்ஸ்டீன் கோப்பின் வீடியோவிலிருந்தும் விசாரணையில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். மறுபுறம் நெடன்யாஹூ ஊழல்குற்றச்சாட்களிலிருந்தும் சிறைத்தண்டனையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

அதனால் அவர்கள் விலகும் புள்ளியை (exit point) விட்டு போரைத் தீவிரமாக்குவது (escalating point ) பற்றியே மேலும் மேலும் சிந்திக்கிறார்கள். அதன் எதிரொலியே ஈரானை தரைவழியாகத் தாக்கி அழிப்பதற்கான படை நகர்வு .ஆனால் அது அவர்களையே திருப்பித்தாக்கும் (Backfire) ஆபத்தைக்கொண்டுள்ளது. ரிச்சட் நிக்ஸன் ஒரு பொய் மூலம் வியட்னாமை தரை வழியாக ஆக்கிரமிப்புச்செய்ய முயன்று ஒரு பேரழிவைச்சந்தித்த நேரம், அமெரிக்க படையினர் அங்கிருந்து உயிர்தப்பி ஓட்டம் எடுக்க வேண்டி ஏற்பட்டதை வரலாறு மறந்து விடவில்லை.

இப்போது இறுதியாக எஞ்சியுள்ள உள்ள ஒரே கேள்வி; போர் இன்னும் நீடித்தால் இந்த உலகில் என்னவாகும் என்பதே. இதை சுருக்கமாக இங்கே எதிர்வுகூறலாம்.

01. பூகோள சக்திவள நெருக்கடி உலகத்தை பெரும் ஆபத்தினுள் தள்ளலாம்.

02. உலகப்பொருளாதார சரிவு ஒவ்வொரு உலக நாட்டையும் பாதிக்கலாம்.

03 அத்தியாவசிய பொருட்களுக்கான உலகத்தட்டுப்பாட்டை குறிப்பாக ஆபிரிக்க ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகள் வலுவாக எதிர்நோக்கலாம் .

04.மத்திய கிழக்கிலுள்ள அனைத்து அறபு நாடுகளினதும் பெருளாதாரம் வேகமாக சரியலாம்.

04 ஆசிய நாடுகளின் பெருமளவு வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது வேலைவாய்ப்புக்களை இழக்க நேரிடலாம்.

05 பெற்றோ-டொலர் வீழ்ச்சியடைந்து பெற்றோ -டொலர் பொருளாதாரம் வேகமாக சரியலாம்.

05. அமெரிக்கா என்ற ஒற்றை அதிகார மையம் (Unipolar power system) சிதைந்து சிதிலமாகி உலகின் பல்வேறு பிராந்தியத்தியங்களிலும் பல்துருவ அதிகார மையங்கள் (Multi Polar power system) தலைதூக்கலாம்.

06. சீனாவின் கைகள் மென்மேலும் ஓங்கி உலக அதிகாரச்சமநிலையின் நடுநாயகமாக சீனா மாறலாம்.

07.நீண்ட யுத்தத்தின் பின்னர் தன்னைத்தகவமைத்துக்கொள்ளும் ஈரான் பிராந்தியத்தின் வல்லரசாக தன்னை வளர்த்துக்கொள்ளலாம்.

08. பஹ்ரைன் ஈராக் ஈரான் லெபனான் அஸர்பைஜான் ஆகிய ஷீயாக்களைப்பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு பலமான கூட்டணி உருவாகலாம். இந்த நாடுகளில் முதலில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்ததன் பின்னர் இது சாத்தியமாகலாம்.

09.அறபு நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ பொருளாதார இராஜதந்திர உறவுகளில் பாரிய மாற்றங்களும் புதிய திசை வழிகளும் நிகழலாம்.

10. இப்போதுள்ள குறைவிருத்தி நாடுகள் பாரிய உணவு நெருக்கடிகளையும் பஞ்சம் பட்டினியையும் எதிர்கெள்ளலாம்.

11.முழு மத்திய கிழக்கும் போருக்கும் இழுக்கப்படலாம் .பாகிஸ்தான் துருக்கி என்பனவும் இதற்குள் வரலாம் .மத்திய கிழக்கின் அனைத்து வளங்களும் அழிக்கப்படலாம். இதற்கான சூழ்ச்சி வலைகளை இஸ்ரேல் கனகச்சிதமாகப் பின்னத் துவங்கியுள்ளதை களநிலவரம் காட்டுகின்றது.

போரை யாரும் தமது தனிப்பட்ட ஊகங்கள் எதிர்பார்ப்புகள் இலக்குகள் அடிப்படையில் தொடங்கி வைக்கலாம். ஆனால் அது எங்கே எப்படி எப்போது முடியும் என்பதை எந்தத் தரப்பாலும் முன்னறிவிக்க முடியாது. இது உலகின் போர் வரலாற்றில் இருந்து நாம் கற்கும் முக்கிய பாடம் .பிரபல அறபு ஊடகவியலாளர் வதா கன்பர் சொல்வதுபோல் போரைச்சூழ நிறையவே மூடு பனிகள் (fog of war) உள்ளன. இந்த மூடு பனியும் பொய்களின் மெய்காவலர்களும் (Bodyguards of lies) உண்மைகளை அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு எப்போதும் தடையாகவே உள்ளனர்.

இன்று பெரும்பான்மையானவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஊகங்களைத்தான் உண்மைகளாக முன்வைக்கின்றனர்.ஆனால் போரை ஆரம்பித்துவைத்த ட்ரம்பும் நெடன்யாஹுவும் ஒன்றைத்தெளிவாகப்புரிந்து கொள்வது நல்லது. அதாவது;அரசியல் தவறுகளும் இராணுவத்தவறுகளும் ஒன்றல்ல.வரலாறு எப்போதும் ஒரே நேர் கோட்டில் இயங்கிய வரலாறில்லை. அது தனக்கேயுரிய வளைவு சுழிவுகளுடன்தான் நகர்கிறது. வரலாற்றுத் தீர்ப்பை நேர்மையாக சிந்திக்கும் உலக மாந்தர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கலாநிதி றவூப் ஸெய்ன்
31.03.2026









Other News
1. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
2. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
3. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
4. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
5. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
6. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
7. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
8. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
9. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
10. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
11. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
12. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
13. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
14. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
15. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
16. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
17. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
18. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
19. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
20. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
21. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
22. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
23. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
24. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
25. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
26. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
27. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
28. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
29. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
30. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..