Posted by S Peer Mohamed
(peer) on 11/30/2024 7:59:49 AM
|
|||
கிபி 1526 - 1530 இடையே முகலாயர்களால் உபியின் சம்பல் நகரத்தில் கட்டப்பட்ட ஜமா மஸ்ஜித், இந்து கோவிலை இடித்து பாபரால் கட்டப்பட்ட மசூதி என சில ஹிந்துத்துவ கும்பலால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசலை (இதுவரை யாரும் சொல்லாத) 500 வருடங்களுக்குப்பின் கிபி 2024 ல் வழக்காடப் படுகிறது. அதிலும் ஆச்சரியம் என்னவெனில் நவம்பர் 19 செவ்வாய் கிழமை தான் மனு தாக்கல் செய்யப்படுகிறது, அதே நாளில் பள்ளிவாசலை survey செய்ய குழு அமைக்க கீழ் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க, ஒரு சில மணி நேரங்களிலேயே அந்த பள்ளிவாசலுக்கு survey செய்ய இந்த குழு விரைகிறது. நவம்பர் 19ம் தேதி survey வை முடித்த குழு மீண்டும் இரண்டாம் முறை survey செய்ய நவம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணிக்கு பள்ளிவாசலுக்கு பலத்த போலீஸ் பாதுாப்புடன் செல்கிறது. உடன் ஹிந்துத்துவ கும்பலும் வருவது குறிப்பிடத் தக்கது. ஏற்கனவே பாபரி மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்கள், ஞானவாபி மஸ்ஜித், ஷாஹி ஈத்காஹ் மஸ்ஜித் எல்லாம் சதிகாரர்களின் குறியில் இருக்கும் இத்தருணத்தில் மேலும் ஆக்கிரமிப்பு என்ற பேரில் இடிக்கப்பட்ட பல்வேறு மஸ்ஜிதுகளை தொடர்ந்து இந்த மஸ்ஜிதும் தொடர் கதையில் இணையக் கூடாது எனக் கருதிய முஸ்லிம்கள் பள்ளிக்கு வெளியே ஒன்று கூடினார்கள். (இங்கே கவனிக்க தக்க இன்னொரு விஷயமும் உண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதி சந்திரசூட் ஞானவாபி மற்றும் மதுரா மஸ்ஜித்களை survey செய்ய உத்தரவிட்ட தாக்கம் தான் இன்று தொடர்கிறது. வரலாறு உம்மை மன்னிக்காது சந்திர சூட்டே) போலீசார் மீது கல்வீசப்பட்டது என்ற காரணம் காட்டி 5 இளைஞர்களை இரக்கமின்றி சுட்டுக் கொன்றது காவல் துறை. வன்முறையை தூண்டுவதற்கான வெறுப்பு பேச்சுக்கள் மூலமும் லத்தி சார்ச் மூலமும் காவல் துறை தான் வேண்டுமென்றே அராஜகத்தை ஆரம்பித்தது பின்னர் அரசு வழங்கிய மற்றும் சொந்த துப்பாக்கிகளால் திட்டமிட்டு சுட்டார்கள் என பல்வேறு நேரடி சாட்சிகள் கூறுகிறது. அகிலேஷ் யாதவ் மற்றும் பல்வேறு அரசியல் சமூக செயல்பாட்டாளர்கள் இது அரசின் திட்டமிடப்பட்ட அடக்குமுறை என்று கூறுகின்றனர். இதற்கான video ஆதாரங்கள் மக்களிடம் தெளிவாக உள்ளது என்பதையும் கூறுகிறார்கள். அந்த பள்ளிவாசலின் கமிட்டி தலைவர் ஸஃபர் அலி செய்தியாளர் சந்திப்பில் தான் பார்த்த சாட்சியத்தை ஊடகத்தின் வாயிலாக பேசிய பின் அவரையும் கஸ்டடியில் வைத்துள்ளது காவல்துறை. அப்பட்டமாக தெரியும் இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு பின்னும் முஸ்லிம் அல்லாத தலைவர்கள், பொதுசமூகம் மௌனம் காக்குமெனில் அவர்களின் நயவஞ்சகத்தை என்னவென்று சொல்வது. முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை தன் இன்னுயிரே போனாலும் இனி மஸ்ஜிதுகளை அபகரிக்க விட மாட்டோம் என்ற உறுதியைத்தான் பாடமாக பெற கடமைபட்டிருக்கிறோம் இறை இல்லதிற்காக இறந்த நயீம் (28), முஹம்மத் பிலால்(25), முஹம்மத் கைஃப்(17), நோமான் மற்றும் அயான் ஆகியோரை அல்லாஹ் ஷுஹதாக்களின் பட்டியலில் சேர்த்து உயர்ந்த சுவனத்தை தருவானாக! அவர்களை இழந்து வாடும் உறவுகளுக்கு பொறுமையையும் உறுதியையும் தருவானாக!
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |