நெம்ஸ் CBSE 8ஆம் ஆண்டு வரலாற்றுத் திருவிழா - ஏர்வாடி

Posted by S Peer Mohamed (peer) on 4/8/2026 6:37:27 PM

மார்ச் 29, 2026

கடந்த 7 ஆண்டுகளை விட சிறப்பாகவும், பெருமை சேர்க்கும் வகையிலும் நெம்ஸ் CBSE பள்ளியின் 8ஆம் ஆண்டு விழா இனிதே நடைபெற்றது.

மழலைகளின் இனிய கலை நிகழ்ச்சிகளுடன், பஸ்னா முஸ்பீரா தொகுத்து வழங்க, பிலால், கபீர், ரொஹைன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்தனர். இறை வசனத்துடன் மாலை 4:45 மணிக்கு விழா துவங்கியது.

முதன்மை விருந்தினராக சேலம் தாருஸ் ஸலாம் கரஸ்பாண்டண்ட் ஹாஜா அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். நெம்ஸ் நிர்வாகிகள் மற்றும் நீட் டிரஸ்ட் நிர்வாகிகளும் மேடையில் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கி, வரவேற்புரையை நமது நட்சத்திரம் பரீரா வழங்கினார்.

பள்ளியின் முதல்வரும், வாழ்வியல் கல்வியின் வழிகாட்டியுமான மும்தாஜ் அவர்கள் நெம்ஸ் பள்ளி கடந்த காலங்களில் சாதித்த வெற்றிகளையும், எதிர்கால இலக்குகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அட்மின் மேனேஜர் சேக் ஹாஜா முகைதீன் அவர்கள் பள்ளியின் சிறப்பம்சங்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து தெளிவாக விளக்கினார்.

சிறப்பு விருந்தினர் எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு டிரஸ்டி ஆசிக் அவர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், நிகழ்ச்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட LED விளக்குடன் கூடிய நினைவுப் பரிசை டிரஸ்டி அகமது பீர் முகைதீன் மற்றும் அட்மின் மேனேஜர் ஹாஜா முகைதீன் அவர்கள் வழங்கினர்.

எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் குறித்து அறிமுக உரையில், பள்ளி கட்டிட பணிகளில் அவர் செய்த பங்களிப்பு சிறப்பாக குறிப்பிடப்பட்டது. 60,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடத்திற்கான foundation marking பணியை மிகக் குறைந்த செலவில் செய்து, கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்பது பாராட்டப்பட்டது.

தனது உரையில், எஞ்சினியர் நவநீதகிருஷ்ணன் அவர்கள், 2018 ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளியுடன் தனது பயணம் தொடங்கியது என்றும், இது ஒரு தனிநபர் பள்ளி அல்லாது 150க்கும் மேற்பட்டோர் இணைந்து உருவாக்கிய சமூகப் பள்ளி என்பதை உணர்ந்தபோது தான் மிகுந்த ஆச்சரியமடைந்ததாக கூறினார்.

அரசு அனுமதிகள் முதல் CBSE அங்கீகாரம் வரை கிடைக்க, நிர்வாகிகள் எடுத்த முயற்சிகளையும் அவர் பாராட்டினார். சமூக முன்னேற்றத்திற்காக இயங்கும் இந்த பள்ளி, எதிர்காலத்தில் ஒரு கல்லூரியாக உருவாகும் வரை தன்னுடைய ஆதரவு தொடரும் என உறுதியளித்தார்.

மேலும், “நான் மேடை பேச்சாளர் அல்ல; இது எனது முதல் மேடை உரை” என பணிவுடன் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அவரது ஒவ்வொரு கருத்தும், நல்ல எண்ணம் கொண்டோர் இணைந்தால் இறைவனின் அருள் அனைத்துத் துறைகளிலும் கிடைக்கும் என்பதற்கான உண்மையான சான்றாக அமைந்தது.

To See the Photos

https://www.facebook.com/share/1CEPcFpGGo/

Admissions open for Academic year 2026-27. Our school timing is 9:00 AM to 3:45PM
📺 எங்கள் YouTube சேனலை Subscribe செய்யவும்
👉 https://www.youtube.com/@nellaieruvadimodelschool

📸 Instagram: nemsschool
🌐 Website: www.nemschools.com

 

#NEMS #CBSE #AnnualDay #Eruvadi #Education #Community #Success #Inspiration #nellaieruvadi






Other News
1. 04-04-2026 போர் இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதா? ஏதேனும் Exit point தெரிகிறதா? - S Peer Mohamed
2. 04-04-2026 போர் நீடித்தால் இந்த உலகம் என்னவாகும்? - S Peer Mohamed
3. 04-04-2026 அமெரிக்கா - ஈரான் போர், அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? - S Peer Mohamed
4. 05-03-2026 திருக்குர்ஆனின் அற்புதம் - !வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன் - S Peer Mohamed
5. 05-03-2026 ஏர்வாடியில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி அறவழி ஆர்ப்பாட்டம்! - S Peer Mohamed
6. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
7. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
8. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
9. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
10. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
11. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
12. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
13. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
14. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
15. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
16. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
17. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
18. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
19. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
20. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
21. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
22. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
23. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
24. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
25. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
26. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
27. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
28. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
29. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
30. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..