|
Posted by S Peer Mohamed
(peer) on 4/12/2026 7:46:56 AM
|
|||
அ.முத்துக்கிருஷ்ணன் அமெரிக்கா மற்றும் ஈரான், ஆறு வாரங்களாக நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேரடி பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. சமீபத்தில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதையடுத்து இந்த பேச்சுகள் சாத்தியமாயின. 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானும் அமெரிக்காவும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பதால் அரசியல் வட்டாரங்களிலும் அரபுலகம் முழுமையிலும் கடும் எதிர்பார்ப்புகள் உருவானது.
அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி JD Vance, சிறப்பு தூதர் Steve Witkoff மற்றும் Jared Kushner ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஈரான் தரப்பில் பாராளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf மற்றும் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi கலந்து கொண்டுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif மற்றும் ராணுவத் தலைவர் Asim Munir நடுவராக செயல்படுகிறார்கள். முதல் கட்ட பேச்சுவார்த்தை 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது; ஆனால் எந்தத் தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை. “சில வேறுபாடுகள் இருந்தாலும் பேச்சுவார்த்தை தொடரும்” என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. பேச்சுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் நீடிக்கின்றன. பாகிஸ்தான் தரப்பு தகவலின்படி பேச்சுவார்த்தையின் மனோபாவம் சாதகமாக இருந்தாலும், Strait of Hormuz மீது கட்டுப்பாடு குறித்து கடும் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் இந்த கடல்சந்தியின் கட்டுப்பாடுகள் குறித்து ஒரு ஒப்பந்தம் எட்டமுடியாமல் இழுபறியாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டேனால்ட் ட்ரம்பு கடந்த 10 நாட்களிலேயே Strait of Hormuz குறித்து முற்றிலும் வேறுபட்ட இரண்டு நிலைப்பாடுகளை பேசியபடி இருக்கிறார். ஒரு கட்டத்தில், அது அமெரிக்காவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாதது, அங்கிருந்து வரும் எண்ணெய் அமெரிக்காவுக்கு தேவையில்லை, ஆகவே அந்த கடல்சந்தியை பாதுகாப்பதும், ஈரானுடன் உள்ள மோதலை சமாளிப்பதும் பிற நாடுகளின் பொறுப்பாகும் என்று கைகழிவினார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அதே விஷயம் அமெரிக்காவின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருப்பதாகவும் அவரே தெரிவித்தார். உலக அரசியலை உற்றுப்பார்க்கிறவர்கள், அந்த துறையின் Experts கூட இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த விசயங்களை தொடர்ந்து கவனித்தும் ஒரு முடிவுக்கு வரமுடியாமலும் இருக்கிறார்கள். ஈரானின் செறிவூட்டப்பட்ட யூரேனியம் கையிருப்பு மற்றும் அணு திட்டம், லெபனானில் Hezbollah மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள்; லெபனானையும் போர்நிறுத்தத்தில் சேர்க்க வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது, ஈரானின் முடக்கப்பட்ட நிதிகளை விடுவிக்க வேண்டிய கோரிக்கை என் பல தலைப்புகளில் நள்ளிரவை கடந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. ஈரான் அணு விவகாரத்தில் தெளிவான உறுதிப்பாட்டை இன்னும் வழங்கவில்லை; மேலும், அமெரிக்கா தனது “இறுதி மற்றும் சிறந்த” முன்மொழிவை முன்வைத்துள்ளது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance கூறியுள்ளார். ஈரான் அரசு ஊடகம், “இந்த சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எட்டுவது பாகிஸ்தானின் கடைசி முயற்சியாக இருக்கலாம்” என எச்சரித்துள்ளது. ஆனால் எங்கள் நிபந்தனைகளை ஈரான் ஏற்கத் தயாராகவே இல்லை என்பதை அறிந்தோம். நாங்கள் மிகவும் நெகிழ்வாகவும், சமரச மனப்பான்மையுடனும் நடந்துகொண்டோம். எங்கள் ஜனாதிபதி எங்களுக்கு, நல்ல நம்பிக்கையை கொடுத்து அனுப்பினார், சிறந்த முயற்சியை செய்து ஒப்பந்தத்தை எட்டுங்கள் என்றே கூறினார். அதைப் பின்பற்றினோம். ஆனால் எந்த முன்னேற்றமும் அடைய முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது” அட்மிரல் பிராட் கூப்பர், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு குழு முழுவதும், நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகியோருடனும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டோம். நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், எங்கள் குழுவுடன் எப்போதும் தொடர்பில் இருந்தோம். இப்போது நாம் மிகவும் எளிய ஒரு முன்மொழிவுடன் வெளியேறுகிறோம் — அது எங்களின் இறுதி மற்றும் சிறந்த முன்மொழிவு அதனை மேசையில் வைத்துள்ளோம். ஈரான் அதை ஏற்கிறதா என்பதை பார்க்கலாம்.” எந்த முடிவையும் எட்டாத நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி J.D.Vance இஸ்லாபாத்தில் இருந்து கிளம்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஈரான் தலைவர்கள் கூறுகையில், 'நங்கள் இஸ்லாமாபாத் கிளம்பும் போதே இந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்கும் என்று நினைத்து கிளம்பவில்லை, அமெரிக்காவின் குணத்தை நாங்கள் நன்கு அறிவோம், ஆனால் இந்த உலகத்திற்கு நாங்கள் பேச்சு வார்த்தைகளுக்கு எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம் என்பதை காட்டவே இங்கு வந்தோம்" என்றார்கள். MuthuKrishnan |
|||
|
|
|||
| News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |
||