இன்று ஏர்வாடி வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ திரு ரெட்டியார்பட்டி நாராயணன் அவர்களை ஏர்வாடி SDPI மகளிர்அணியினர் சந்தித்து ஏர்வாடியின் நலனிற்காகவும் வளர்ச்சிக்காகவும் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். ஏர்வாடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தரவேண்டியும், ஏர்வாடி நம்பியாற்றை சுத்தம் செய்து அதில் கழிவுநீர் கலக்காமல் மாற்று வழி ஏற்படுத்தி தரவும்,1-வது வார்டு பீலிகுளத்தில் ஒரு உறைகிணறு அமைத்துதரவேண்டியும், மேலும்! அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் இருக்கும் அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் பெண்களின் நலனைக்கருத்தில் கொண்டு மகப்பேறு சுகாதாரநிலையமும், குழந்தைகளுக்கான மனமகிழ்பூங்கா அமைத்துதர வேண்டியும், இன்னும் ஏர்வாடி கோவில்வாசல் பகுதியில் உள்ள தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சிதிலடைந்த கட்டிடங்களை சரிசெய்தும், கழிவறை வசதியை அமைத்து தருமாறும் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வில் SDPI கட்சியின் 5-வதுவார்டு கவுன்சிலர் ஹலிமா, நாங்குநேரி சட்டமன்றத்தொகுதி தலைவர் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ், தொகுதிச் செயளாலர் ஜெஸிமா, ஏர்வாடி வடக்குகிளைத் தலைவர் மீரா ஆஸிக்,செயளாலர் ஃபர்ஹானா,SDPI கட்சியின் நாங்குநேரி சட்டமன்றத் தலைவர் ஹாஜா ஃபிர்தவ்ஸி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். என்றும் மக்கள் பணியில் SDPI மகளிர் அணி IT WING ஏர்வாடி நகர
|