difference between naltrexone and naloxone vivatrol shot read நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!
( தொடர்- 3 )
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
( தொடர்- 1 ), ( தொடர்- 2 )
(ஸல்)அவர்களின் ஜியாரத்தை முடித்துவிட்டு தாமதிக்காமல் மஸ்ஜிதுந்நபவிக்கு எதிரில் உள்ள (ஜன்னத்துல் பகீஃ)சுவன வாசிகளின் அடக்கஸ்தலத்திற்கு சென்றேன்.முகமன் கூறி உள்ளே நுழைந்த நான்,அங்கே கண்ட காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.......
நான் உள்ளே நுழையும் போதே 7 ஜனாஸாக்களும் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு ஜனாஸாக்களையும் நல்லடக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்ததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது,
காரணம் 7 ஜனாஸாக்களுமே வெளிநாட்டவர்கள்தான்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் நல்லடக்கப்பணியில் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டவர்கள் மதீனாவாசிகளே.
நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு முத்தவா என்ற மார்க்க அறிஞர் மரணத்தை பற்றியும் அதன் பிறகு நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பற்றியும் சில நிமிடம் உரை நிகழ்த்தினார்.
முடிவில் மரணத்தின் நினைவோடு வாழும் மனிதர்கள் மட்டுமே பாவச்செயல்களை விட்டும் விலகிக்கொள்ளும் வாய்ப்புண்டு என்றார்.
அதன் பிறகு ஒவ்வொரு மனிதரும் தனி தனியாக ஜியாரத் செய்து கொண்டிருந்தனர்.
நானும் வலது புறத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சுவனமங்கை மாதர் திலகம் அன்னை பாத்திமா(ரலி)அவர்களையும்,உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை ஆயிஷா(ரலி)அவர்களின் கபுரையும் ஜியாரத் செய்துவிட்டு,
இடதுபுறத்திலிருந்த ஹழ்ரத் உதுமான்(ரலி)அவர்களையும் ஜியாரத் செய்துவிட்டு மற்ற முஃமினான,முஸ்லிமான அனைவரின் கபுருகளையும் ஜியாரத் செய்தேன்.
கடைசியாக எனது ஆன்மீக உஸ்தாது இராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்த மௌலானா அல்ஹாஜ் முபாரக் ஆலிம் அவர்களின் நினைவு வரவேஅவர்களுக்காக யாசீன் சூராவை ஓதி துஆ செய்தேன்.
காரணம் எனது ஆசான் அவர்களும் எம்பெருமானாரின் ஜியாரத்திற்காக வந்த இடத்தில் தான் வபாத்தானார்கள்.அவர்களின் விருப்பத்திற்கிணங்க மதீனாவிலேயே அவர்களும் நல்லடக்கம் செய்யபட்டார்கள்.
நான் ஊரில் வைத்து எனது ஆசானை காணும் போதெல்லாம் அடிக்கடி அவர்கள் சொல்லும் வார்த்தை இதுதான்,
கண்மணி நாயகமே,மறுமையில் உங்களை காணவேண்டும்,மறுமையில் உங்களுடன் இருக்க வேண்டுமென்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.
ஆனால் நானோ இம்மையிலும் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறேன்.உங்களுடனேயே மறுமையிலும் எழுப்பப்பட வேண்டுமென ஆசைப்படுகிறேன் என்பார்கள்.
எம்பெருமானாரின் மீது அவர்கள் வைத்திருந்த காதல் தோற்றுப்போகவில்லை என்பதை ஜன்னத்துல் பகீஃ வரும் ஒவ்வொரு முறையும் உணர்ந்து கொள்ளமுடிகிறது.
யாரெல்லாம் பெருமானாரின் மீது நேசம் கொள்கிறார்களோ,அவர்களெல்லாம் பெருமானாராலும் நேசிக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஜன்னத்துல்பகிஃவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு ஜனாசாக்களுமே சாட்சியாகும்.
நான் மதீனாவில் தங்கிய மூன்று நாட்களும் ஒவ்வொரு வக்து தொழுகையும் முடிந்து ஜன்னத்துல் பகிஃ சென்று குறைந்தது 10 நிமிடங்களாவது ஜியாரத் செய்து விடுவேன்.
அந்த நேரத்தில் என் கண் முன்பாக 1435 ஆண்டுகளுக்கு முன்பு பெருமானாரும் அவர்களது தோழர்களும் வாழ்ந்த வாழ்க்கை பசுமையாய் வந்து நிற்கும்.
அதை மனதில் எண்ணி ரசிக்கும் போது என்னையே நான் மறந்து விடுவேன்.
பெருமானாரின் வீட்டிலிருந்து பார்த்தால் ஜன்னத்துல் பகிஃ தெரியும்.இப்போதும் அப்படியே இருக்கிறது.
நான் பெருமானாரின் வீட்டை சுற்றி பல்வேறு இடங்களிலும் எனது நெற்றியை வைத்து அல்லாஹ்விற்கு நன்றி பாராட்டினேன்.
ஒரு நாள் மஃரிபு தொழுகையை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜியாரத் நுழைவாயிலுக்கும் ஜன்னத்துல் பகிஃ விற்கும் இடையில் வெளிபுறத்தில் தொழுது கொண்டிருந்தேன் அப்போது எனதருகில் ஒருவர் சுஜூதில் நீண்ட நேரம் இருந்தார்.
இதை நான் தொழுது முடித்ததும் எதார்த்தமாக பார்த்தேன்.சில நிமிடம் கழித்து அவர் எழுந்த போது கலங்கிய கண்களுடனும் கண்ணீர் சிந்திய முகத்துடனும் காணப்பட்டதை பார்த்தேன்.
சுபுஹானல்லாஹ்.... அவர் வேறு யாருமில்லை.எங்களுக்கு தங்கும் விடுதியை அடையாளம் காட்டித்தந்த அதே மதீனாவாசிதான்.
என்னைக் கண்டதும் சிரித்தார் நானும் பதிலுக்கு சிரித்தேன்.இவ்வளவு பெரிய பள்ளியில் எவ்வளவோ இடமிருந்தும் இந்த நடைபாதையில் ஏன் தொழுதாய்? எனக்கேட்டார்.
இது பெருமானாரின் வீட்டிற்கும் ஜன்னத்துல்பகிஃவிற்கும் இடையில் இருப்பது மட்டுமல்ல, இந்த பாதையில்எம்பெருமானார் எத்தனை முறை நடந்திருப்பார்கள்,அவர்களின் பாதம் பட்ட இடமாக இது இருந்திருக்குமானால்...நானும் கொடுத்து வைத்தவன் தானே?என்றேன்.
எனது பதிலை கேட்ட அந்த மதீனாவாசி ரசூல் மீது உனக்கு அவ்வளவு பிரியமா? என்றார்.ஆமாம் என்றேன்.
அதற்கு அவர் சொன்ன வார்த்தை,பெருமானாரை நேசிப்பதில் மதீனாவாசிகளைவிட சிறந்தவர் இல்லை என்ற நிலை மாறி உலகெங்கும் வாழும் முஃமீன்,முஸ்லிமான மக்களால் நமதருமை நாயகம் பெரிதும் நேசிக்கப்படுகிறார்கள்.என்ற செய்தி எங்களுக்கு அதிகம் மகிழ்ச்சியை தருகிறது என்றார்.
ஆமாம்,பெருமானாரின் கண்ணியம் மதீனாவின் கண்ணியமென கருதி வாழ்கிறார்கள் மதீனத்து மக்கள்.
ஒருவருக்கொருவர் உதவுவதிலும்,விருந்தோம்பல் செய்வதிலும் மதீனத்து மக்களை விட இவ்வுலகில் உயர்வானவர்களை காண்பது அரிது எனக்கருதுகிறேன்.
இதற்குஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ மிக முக்கியமானது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
எனது மதீனத்து பயணத்தின் மூன்றாவது நாள் அஸர் தொழுகையை பெருமானாரின் பள்ளியில் நிறைவேற்றி விட்டு எம்பெருமானாரின் சிறிய தந்தை ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் ஜியாரத்திற்காக உஹதுமலை நோக்கி புறப்பட்டேன்.
உஹதுமலை என்றதும் உஹதுப்போர் கண்முன் வந்து நிற்கிறது.உஹது யுத்தத்தின் வரலாற்றை பல்வேறு ஹதீஸ்களில் படித்த அநுபவம் எனக்குள் பீறீட்டு கிளம்பியது.
இறைவனின் அருளால்,உஹதுமலை வந்தடைந்தேன்.
ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு எதிரில் இருக்கும் உஹதுமலையின் ஒரு பாகத்தின் உச்சியில் சின்னஞ்சிறு குழந்தையிலிருந்து பெரியவர்களென ஒரு பெருங்கூட்டமே அங்கே திரண்டு இருந்தது.
நானும் ஆர்வத்துடன் மலை ஏறினேன்.மலையின் உச்சிக்கு போகும் வழியில் ஒருவர் தனது 8 வயது மகனுக்கு உஹதுமலையின் சிறப்பை பற்றியும்,உஹதுப்போரின் நிகழ்வைப்பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.தகப்பனுக்கும்,மகனுக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த அந்த கருத்துப்பறிமாற்றத்தை பட்டும் படாமலும் கேட்டுக்கொண்டிருந்தேன்.
திடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.
அதற்கான காரணத்தை கேட்டால் நான் வியந்ததை போல நீங்களும் வியந்துதான் போவீர்கள்.
(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
இன்ஷா அல்லாஹ்...
தொடரும்.....


|