தமிழ் நாடு அரசு தேர்தல் துறை இணையத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதளம்: http://www.elections.tn.gov.in/eroll/
உங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்க…
1. உஙகள் மாவட்டத்தை தேர்வு செய்க
2. உஙகள் சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்க
3. வாக்காளர் பெயர் மூலமாக தேடவும் என்பதை தேர்ந்தெடுக்க..
4. சமர்ப்பிக்க…
5.வாக்காளர் பெயர், பாலினம் ஆகிய விவரங்களை கொடுத்த பின் சமர்ப்பிக்க.
6. இப்போது
வாக்குச் சாவடி எண் |
வரிசை எண் |
கதவு எண் |
தெருவின் பெயர் |
பெயர்
|
இனம் |
வயது |
உறவினர் பெயர் |
உறவு |
அடையாள அட்டை எண் |
ஆகிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு கிடைக்கும்.
7. உங்களது அடையாள அட்டை எண் மீது கிளிக் செய்தால் விவரங்கள் கிடைகும்.
8. அதே போல் முகவரியில் உள்ள இதர வாக்காளர்களின் விவரம் அறிய கதவு எண்ணில் க்ளிக் செய்யவும். எடுத்துக்காட்டாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் வீட்டில் இருக்கும் வாக்காளர்கள் விவரம் இதோ:
வார்டு எண் 110 கோபாலபுரம் 4வது தெரு,கோபாலபுரம், கதவு எண்: 15 old no: 8:
Update on 01.07.2010:
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் அஞ்சல் அலுவலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்பட பல்வேறு மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க வரும் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மண்டல வாக்காளர் பதிவு அதிகாரி எதுகுலராவ் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ளும் வகையில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் வாக்காளர்கள் திருத்தங்கள் செய்ய விரும்பினால் அதற்குரிய விண்ணப்பங்களை பெற்று அந்தந்த மையத்திலேயே வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 16ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இது மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்திலும் PDF கோப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://www.elections.tn.gov.in/eroll/ இணையத்திலிருந்து ஏதாவது ஒரு தமிழ் எழுத்துருவை உங்கள் கணிணியில் நிறுவிக் கொள்ளவு ம். (Install any one of the Tamil Font).
உங்களது மாவட்டத்தையும், தொகுதியையும் தேர்ந்தெடுக்க.
நீங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின் பட்டியல் PDF தொகுப்பாக தரப்பட்டுள்ளது. இதில் நிறைய வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதால் உங்கள் பெயர் கண்டுபிடிப்பது சிறிது கடினமே. விரைவில் பெற PDF கோப்பில் CTRL+F அழுத்தவும். 01.07.2010 அன்று உங்கள் வயதை அந்த பெட்டியில் இட்டு Enter தட்டிக்கொண்டே வாருங்கள். இது சிறிது எளிதாயிருக்கும்…
Recent Posts: