தலைவர்: நான் தோற்றது நல்லாதாப் போச்சு!
தொண்டர்: சீரியசாத்தான் சொல்றீங்களா தலைவரே?
தலைவர்: ஆமாம்! ஜெயிச்சா இலவச மின்சாரம் வழங்குவேன்னு வாக்குறுதி கொடுத்திருந்தேன்!
*******
அமைச்சர்: அம்மா! தேர்தல் வாக்குறுதிகளில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யலாமா?
அம்மா : என்னென்ன மாற்றங்கள் செய்யனும்?
அமைச்சர்: இலவச மிக்சிக்குப் பதிலா இலவச அம்மி, இலவச மின்விசிறிக்குப் பதிலா சாதா விசிறி.!
*******
தலைவர்: மந்திரி சபை மாற்றம் வரப்போகுது! நீங்கதான் அடுத்த மின்சாரத்துறை மந்திரி! மகிழ்ச்சிதானே?
எம்.எல்.ஏ: தலைவரே! அப்படீன்னா அதிகாரமில்லாத அமைச்சர்னு சொல்லுங்க!
*******
அமைச்சர்: நான் வரும்போது யாருமே சல்யூட் அடிக்க மாட்டேங்கிறாங்களே? என்னை கட்சிய விட்டு நீக்கிட்டாங்களா?
உதவியாளர்: அப்பவே சொன்னேன் மின்சாரத்துறை அமைச்சர் பதவி வேணாம்னு! கேட்டீங்களா?
*******
வீரப்பன்: மின்சாரத்துறை அமைச்சரை நாங்க கடத்தி வச்சிருக்கிறோம்! 10 கோடி ரூபாய் தந்தால்தான் விடுவிப்போம்!
கமிஷனர்: அரசாங்க நிலைமை சரியில்லை என்பதால் அமைச்சரை நீயே வச்சுக்கட்டுமுன்னு முதலமைச்சர் சொல்லிட்டாங்க!