Posted By:peer On 10/30/2012 |
|
இரக்கமின்றி பள்ளிக்கூரைகளை துளைத்து எதை சாதித்தன ஏவுகனைகள்
துக்கங்களைவிட அச்சங்களை சுமந்து கொண்டு சிதறிப்போயின பூக்கள் நின்றுவிட்டன தாக்குதல்கள் பயங்களும் காயங்களும் தன் விகாரமுகம் காட்டிக்கொண்டேயிருக்கின்றன
விரிசலுற்ற கூரைவழி.... உயிர்த்துறந்த பூக்கள் உருக்குலைந்த நூல்கள் ஊனமாய் பள்ளி ஊமையாய் கல்வி விடையின்றி ஒலித்தபடி அலைந்துகொண்டே திரிந்தது
கேள்விமட்டும் இரக்கமின்றி பள்ளிக்கூரைகளை துளைத்து எதை சாதித்தன ஏவுகனைகள்
- ஏர்வாடி சிந்தா |