Posted By:peer On 10/30/2012 |
|
அம்மா அப்பாவின் தோள்களுக்கிடையில் உறங்கிய பொழுதுகள்
அவர்களின் மூச்சுக்காற்றினை இனம் பிரித்த இரவுகள்
படுக்கை கதைகளில் அப்பாவின் முகபாவம் அம்மாவின் விமர்சனம்
கனவுகளின் கதறல்களில் கட்டியணைத்த இருவரின் நெஞ்சங்கள்
இருவர் கைப்பிடித்து நடந்த மெரினா கடற்கரை
சுவர்களில் கிறுக்கிவைத்த அப்பா அம்மா ஓவியங்கள்
என- ஒவ்வொரு இரவிலும் தூக்கம் கெடுக்கும் இந்நினைவுகள் ஒரு நொடிக்கூடவா தோணாமல் போனது தனித்துச் சென்ற அவர்களுக்கு ?..?
எழுதியவர் : ஏர்வாடி சிந்தா
|