முரண்டு பிடித்து , பின் பழகி இணைபிரியாது என்னைத் தொடரும் செம்மறிக் குட்டி......
குழந்தைகளுடன் தானும் குழந்தையாய் தெருவெல்லாம் துள்ளித்திரியும்...
சலங்கை ஓசைகளில் மயங்கி பின் தொடரும் மழலைகள்.....
குழந்தைகள் கூடியிட்ட முத்தங்களுடன் ஈரம் சுமந்து நிற்கும் பண்டிகை முன்னிரவு...
பையனை பள்ளிவாசல் அனுப்பிவிட்டு அறுங்கள் என கட்டளையிடும் மனைவி.......
மறுநாள் தொழுகைக்குப் பின் மெல்ல நீரருந்தி பாசத்துடன் என் பாதம் முகரும் ஆடு..........
கட்டியணைத்து விட்டு கால்களை பற்றுகையில் பந்த பாசங்களும் தன்னல உணர்வும் விலங்கிடப் பட்டிருக்கும் நெஞ்சினில்.............
ஈதலுக்காக எதையும் துற என நினைவூட்டும் கத்தி........
எனக்கே எனக்கென்று என்னுடன் வாழ்ந்த ஒன்றை அன்பிற்காக, கிழிசலுறும் மனிதஉறவுகளை தைப்பதற்காக இறை பெயரில் அறுக்கின்றேன் இதயத்திலிருந்து அறுபட மறுக்கின்றது ஆட்டின் முகம்.....................
எதிர் கொண்ட ஏழைகளின் ஏக்கங்களும் விடுபட்ட உறவுகளின் இன்முகமும் மகிழ்வுகளும் பதிந்து கிடந்தன ஆட்டின் கண்களில்........
நீர்த்துளிகளாய் விழிகளில் பீறிட்டன இரத்த துளிகள்................................
என்னுள் மனிதம் விதைத்து உண்மை துறவு போதித்து உறவுகளை ஒன்றாக இணைவித்து இன்னும் யாவரும் கேளீர் என்பதை பறைசாற்ற உயிர்த் தியாகம் செய்து இறந்து கிடந்தது என் செம்மறி .............
ஆம் இது தியாகத் திருநாள்தான்.........................
எழுதியவர் :சிந்தா
|