Posted By:peer On 2/26/2013 |
|
"டேய்.. ஓரமா கையபிடிச்சுட்டு கூட வரணும்டா.."
"இப்படி வாங்கப்பா.. இந்த சைடுதான் என்ட்ரி.."
"நம்ம ஊரு பஸ் எங்க நிக்குதுனு பார்த்து அங்க போய் நிக்கணும்டா.."
"நம்ம போறது ஜெட் ஏர்லப்பா.. இங்க லைன்ல நில்லுங்க.."
"எங்க இருந்து எந்த ஊருக்கு போறம்னு சொல்லி கண்டக்டர்கிட்ட டிக்கட் எடுக்கணும்டா.."
"இந்த கவுன்டர்ல நம்ம வந்துட்டம்னு செக் இன் பண்ணனும்பா.."
"இதாண்டா டிக்கட்.. இறங்க வரைக்கும் பத்தரமா வச்சுக்கணும்.."
"இதான்ப்பா போர்டிங் பாஸ்.. பத்தரம்.."
"பஸ் நம்பர பாத்து ஏறனும்டா மாத்தி ஏறுனா நம்ம ஊருக்கு போகமுடியாது சரியா.."
"ஃபிளைட் நம்பர் போர்டிங் பாஸ்ல இருக்கு பாருங்கப்பா.. அந்த நம்பர் எந்த கேட்டுனு பார்த்து அது வழியா நம்ம ஃபிளைட்டுக்கு போகனும்.."
"டேய்.. கைய வெளில நீட்டக்கூடாது.. இப்பிடி உக்காரு.. சாய்ஞ்சுக்க.."
"அப்பா.. இந்த பெல்ட்ட போட்டுக்கோங்க.. ஸீட்ட பின்னால சாய்ச்சுக்கலாம்.."
"வேகமா பஸ் போகுதுல்ல அதனால மரம் எல்லாம் பின்னால போற மாதிரி இருக்கும்.. பார்த்துட்டே வா.."
"கீழ பாருங்கப்பா.. எல்லாம் சின்னதா தெரியும்.. அப்புறம் மேகம் பஞ்சு மூட்ட மாதிரி சூப்பரா இருக்கும்.."
"இந்தா சாப்ட வெள்ளரிக்காயும் மிக்சரும் வாங்கி இருக்கேன்..மெதுவா சிந்தாம சாப்பிடனும் சரியா.."
"இந்த ட்ரேய இழுத்து அதுல வச்சு சாப்பிடுங்கப்பா.. இந்த பேப்பர் கிளாத்த மடில போட்டுக்கங்க.. "
"இர்ரா.. தவ்வாத.. எல்லாரும் எறங்குனப்புறம் மெதுவா படில பார்த்து எறங்கனும்.. சரியா.."
"இருங்கப்பா.. பெல்ட் சைன் ஆஃப் பண்ணதுக்கு பின்னாடி பெல்ட்ட கலட்டிட்டு மெதுவா இறங்கனும்.."
"நம்ம ஊரு வந்துருச்சுடா.. எப்படி பஸ் ஸ்பீடா வந்துச்சா.."
"வந்தாச்சுப்பா.."
டிஸ்கி.. சிறுவயதில் அப்பா விரல் பிடித்து பழகி கொடுத்த அடிப்படைகள் தான் நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றன...எத்தனை உயரம் சென்றாலும் தளத்தை மறக்காதீர்கள்.. இறங்கிய பின் தளம்தான் தேவை.. இறக்கைகள் அல்ல....
Nice one. Received from a friend.
|